அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாரான இஸ்ரோ! சந்திரயான் 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: விண்வெளி துறையில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இந்நிலையில், நிலவிலிருந்து மண் துகள்கள், சிறு கற்களை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய சந்திரயான் 4 திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ கூறி வந்தது. தற்போது இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
நிலவில் விண்கலனை வெற்றிகரகமாக தரையிறக்கி சந்திரயான் 3 திட்டம் உலக சாதனை படைத்திருந்தது. இதனையடுத்து சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம், பூமியிலிருந்து நிலவுக்கு விண்கலன் அனுப்பப்பட்டு, அது வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு, நிலவிலிருந்து மண் துகள்கள், சிறு கற்களை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்புவதே ஆகும்.

இதை இஸ்ரோ 2027ல் சாத்தியப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இந்த மிஷனில் மொத்தம் 5 சவாலான கட்டங்கள் இருக்கின்றன. 1. நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல், 2. நிலவின் மண், சிறு கற்களை சேகரித்தல், 3. சந்திரனிலிருந்து வெளியே வருவது, 4. சந்திரனின் சுற்றுப்பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி திரும்புவது, 5. பூமியில் பத்திரமாக தரையிறங்குவது என 5 கட்டங்கள் இருக்கின்றன.
சந்திரயான் 4 இரண்டு கட்டங்களாக ஏவப்படும் என்றும், இதில் நான்கு தொகுதிகள் உள்ளது என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. தற்போது இந்த திட்டத்திற்குதான் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேபோல, இந்தியா சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கவும், வெள்ளி கோளை ஆய்வு செய்ய உள்ள 'வீனஸ் ஆர்பிட்டர்' மிஷனுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications