மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் மீண்டும் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளன.

கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதற்கு எக்ஸ்.பிபி 1 வைரஸ் திரிபே காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பெருந்தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது.
கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு உயர்ந்து இருப்பது மக்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்தது. கொரோனா பாதிப்பு நேற்றை விட 20 சதவிகிதம் உயர்ந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, நாட்டில் ஒருநாள் கொரோன பாதிப்பு 12,591 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 65,286- ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை தளபதிகள் மாநாடு இன்று டெல்லியில் நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில் ராஜ்நாத்சிங் கலந்து கொள்வதாக இருந்தது.
ஆனால், தொற்று உறுதி செய்யப்பட்டதால் ராஜ்நாத்சிங் பங்கேற்கவில்லை. ராஜ்நாத் சிங்கிற்கு லேசான அறிகுறிகள் உள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள ராஜ்நாத்சிங் ஓய்வு எடுத்து வருகிறார். நேற்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான முதல் ராணுவ தளபதிகளின் மாநாட்டில் ராஜ்நாத்சிங் பங்கேற்று இருந்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications