மழை நிவாரணம்: தமிழகம் கேட்டது 2,629 கோடி, 352 கோடி ஒதுக்கிய மத்திய அரசு! புதுச்சேரிக்கு ரூ.17 கோடி
டெல்லி: தேசிய பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.352.85 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.17 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் வெள்ளம், நிலச்சரிவு உள்பட இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும்.
இந்நிலையில் சமீபகாலமாக மத்திய அரசு சார்பில் நிவாரண நிதி சரியாக வழங்கப்படுவதில்லை என மாநில அரசுகள் புகார் தெரிவித்தன. இதனால் மக்களின் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றங்கள் சாட்டப்பட்டன.

மாநிலங்கள் பாதிப்பு
இந்நிலையில் 2021ல் மழை, வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி உள்பட பல்வேறு காரணங்களால் தமிழ்நாடு, இமாச்சல் பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்பட பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டன. புதுச்சேரியிலும் இயற்கை பேரிடரால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் மத்திய அரசிடம் அந்தந்த மாநில அரசுகள் நிவாரணம் கோரின. ரூ. 2,629 கோடி ரூபாய் நிவாரணம் தேவை என்பது தமிழக கோரிக்கையாகும்.

அமித்ஷா ஆலோசனை
இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகம் உள்பட 5 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. குறிப்பாக 5 மாநிலங்களுக்கு மட்டும் ரூ.1,664.25 கோடி வழங்க அனுமதி கொடுக்கப்பட்டது.

தமிழகத்துக்கு எவ்வளவு
அதன்படி ஆந்திராவுக்கு ரூ.351.3 கோடி, இமாச்சல் பிரதேசத்துக்கு ரூ.112.19 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.492.39 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.355.39 கோடி, தமிழகத்துக்கு ரூ.352.85 கோடி, புதுச்சேரிக்கு ரூ.17.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகம்
மேலும் இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கையில், ‛‛இந்த கூடுதல் நிதி, மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு மத்திய அரசால் ஏற்கனவே வழங்கப்பட்ட நிதிக்கு அப்பாற்பட்டது. 2021-2022ல் இதுவரை 28 மாநிலங்களுக்கு, மாநில பேரிடர் நிதியத்துக்காக மத்திய அரசு சார்பில் ரூ.17,747.20 கோடியும், 8 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியத்தில் இருந்து நேரிடையாக ரூ.4,645.92 கோடியும் வழங்கப்பட்டு உள்ளது'' என தெரிவித்துள்ளது.
-
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
சாதனையா? வேதனையா? விஜய் முதல்வராகி 30 நாள்! அதிரடி ஆக்ஷன்களும்.. அரசின் முன் நிற்கும் சவால்களும்! -
கேம் ஓவர்.. விஜய் போட்ட சிங்கப்பெண் ஸ்கெட்ச் பின்னணி! இனி நேரா முதல்வர் ஆபீஸ் லிங்க்.. சைபர் டீம் அதிரடி -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications