தீபாவளி போனஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாள் சம்பளம் வழங்க உத்தரவு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு 2024-25 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் சாராத போனஸை (non-productivity-linked bonus) மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு துறையில் குரூப் சி மற்றும் நான்-கெசட் (Non Gazetted Group B)குரூப் பி ஊழியர்கள், ஆயுதப்படையில் பணியாற்றுவோருக்கு இந்த போனஸ் கிடைக்கும். இதற்கான ஒப்புதலை மத்திய நிதி அமைச்சர்கள் வழங்கி உள்ளனர்.

அதன்படி இந்த ஊழியர்கள் 2024-25 ஆம் ஆண்டிற்கான பண்டிகை கால போனஸாக 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமான 'அட்-ஹாக் போனஸ்' பெறுவார்கள். அதன்படி ரூ.6,908 போனஸாக கிடைக்கும்.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அமைச்சககங்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛ Non Productivity linked Bonus (Ad - hoc Bonus) குரூப் 'சி' பிரிவில் உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும், குரூப் 'பி' பிரிவில் Non Gazetted ஊழியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
2024-25 நிதி ஆண்டுக்கான 30 நாட்கள் ஊதியத்திற்கு சமமான தொகை போனஸாக வழங்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் ஆயுதப்படை ஊழியர்களுக்கும், யூனியன் பிரதேசங்களில் உள்ள ஊழியர்களுக்கும் கிடைக்கும்.
இந்த போனஸ் எப்படி கணக்கிடப்படும் என்பது பற்றி பார்க்கலாம். அதாவது ஒருவரின் அதிகபட்ச மாதசம்பளம் ரூ.7 ஆயிரம் என்று வைத்து கொள்வோம். அப்படி என்றால் 7,000 × 30 ÷ 30.4 = Rs 6,907.89 (ரூ. 6,908) என்ற அடிப்படையில் கணக்கீட்டு வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 மார்ச் 31ம் தேதி வரை பணியில் இருந்தவர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும்.
ஒருவேளை அதற்கு முன்பாக ஓய்வு பெற்றவர்கள் அல்லது பணியை ராஜினாமா செய்தவர்கள் அல்லது மரணத்தை சந்தித்தவர்கள் 6 மாதம் தொடர்ந்து பணியாற்றி இருக்கும் பட்சத்தில் போனஸ் பெறுவார்கள். ஒருவர் Deputation முறையில் வேறு துறை பணிக்கு சென்றிருந்தால் அவர் பணியாற்றிய துறை சார்பில் போனஸ் வழங்கப்டும்.
இந்த போனஸ் அறிவிப்பால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பலன் பெற உள்ளனர். பண்டிகை காலத்தையொட்டி அவர்களுக்கான போனஸை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications