ஓசூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து? தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த மத்திய அரசு!
டெல்லி: ஓசூர் விமான நிலையத் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள வான்வெளி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குத் தேவைப்படுவதாகக் கூறி, ஒசூரில் ஏர்போர்ட் அமைக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தாக தகவல் தெரிவித்துள்ளது.
ஒசூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான வான்வெளி அனுமதியை வழங்க முடியாது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் நகரமான ஓசூரில் உற்பத்தியாகும் பொருட்கள் வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. ஓசூர் நகரம் வான்வழிப் போக்குவரத்துக்கு அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரையே நம்பியுள்ள நிலையில், தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) ஓசூரைச் சுற்றியுள்ள 5 இடங்களை தேர்வு செய்து இந்திய விமான நிலையம் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தது. இந்த திட்டத்தை நிறைவேற்ற 2 இடங்கள் சாத்தியம் என இந்திய விமான நிலைய ஆணையம் பதிலளித்தது.
இதையடுத்து, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், ஓசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான சிறப்பு ஆலோசகரை நியமித்து 2 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வின்படி சூளகிரி வட்டத்துக்கு உட்பட்ட வெங்கடேஷ்புரம், மிடுதேப்பள்ளி, ஓசூர் வட்டத்துக்கு உட்பட்ட அரவனப்பள்ளி, முத்தாலி, அளேந்தம், பலவனப் பள்ளி, ஆத்தூர், காருப்பள்ளி, தாசனப்பள்ளி, நந்திமங்கலம், சூடகொண்டப்பள்ளி உள்ளிட்ட 12 கிராமங்களில் 2,980 ஏக்கர் நிலத்தில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
ஓசூர் விமான நிலைய திட்டத்துக்காக 12 கிராமங்களில் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள விவசாய நிலம், வறண்ட நிலம், அரசு புறம்போக்கு நிலம் ஆகியவற்றின் சர்வே எண்ணுடன் அரசின் நிர்வாக அனுமதியை பெற்றுத்தரக் கோரி கடந்த செப்டம்பரில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், ஒசூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான வான்வெளி அனுமதியை வழங்க முடியாது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓசூரைச் சுற்றியுள்ள வான்பகுதி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ராணுவ மற்றும் சோதனை விமானங்கள் பறப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஓசூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாய நிலங்களை விட்டுத்தர முடியாது என அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்கவும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications