வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி... விரைவில் வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
டெல்லி: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சுற்றுலாத்துறை முடங்கியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரமும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு தடுப்பூசி முகாம்களை அதிகம் நடத்தி வருகின்றன. இதனால் முன்பைக் காட்டிலும் இப்போது கொரோனா பாதிப்பும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்துள்ளன.
விமான போக்குவரத்துறை, சுற்றுலா, விருந்தோம்பல் துறையை புத்துயிர் அளித்து மீட்டெடுக்கும் நோக்கில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. முதற்கட்டமாக 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா கொடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இலவச விசா திட்டம் குறுகிய கால வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் வகையில் உள்ளது. இதனிடையே இலவச விசா திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் ரூ.100 கோடி வரை வருவாய் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் அனுமதி தருவதா அல்லது குறிப்பிட்ட சில நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் இந்தியாவுக்கு வர அனுமதி தருவதா என்பது பற்றியும் தீவிர ஆலோசனை நடந்து வருகின்றன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் கொரோனா கட்டுக்குள் உள்ள நாடுகள் என இரண்டாக வகையாக பிரித்து புள்ளியியல் அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுக்க உள்ளது.
பொருளாதாரத்தை மீட்டெடுத்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள மத்திய அரசு, முதல் பணியாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வது தொடர்பாக கவனம் செலுத்தி வருகிறது. கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், டெல்லி, மும்பை, ராஜஸ்தான், கோவா போன்ற மாநிலங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் வகையில் இருக்கின்றன.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications