விண்ணை முட்டும் கிடுகிடு அரிசி விலை உயர்வு- திடீரென அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதித்த மத்திய அரசு!
டெல்லி: நாட்டின் நெல், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20% வரி விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் சீனாவுக்கு அடுத்ததாக அரிசி ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 40%. 2021-22ம் ஆண்டில் இந்தியா 21.1 டன் அரிசியை ஏற்றுமதி செய்திருந்தது.
ஆனால் இந்தியாவில் நடப்பாண்டில் நெல் சாகுபடி பரப்பளவு 6% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 367.55 லட்சம் ஹெக்டேர் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் 2022-23- ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி கணிசமாக பாதிக்கும் எனவும் கூறப்பட்டது.

இதனால் மத்திய அரசு நெல், அரிசி ஏற்றுமதிக்கு நடப்பாண்டு தடை விதிக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால் நெல்-அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்பட்டது.
அதே நேரத்தில் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை மட்டும் விதிக்கும் எனவும் சில தகவல்கள் தெரிவித்தன. இது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தியது.
இதனிடையே சந்தைகளில் அரிசி விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக கடுமையாக உயர்ந்தது. தமிழ்நாட்டில் சென்னையில் 26 கிலோ எடையுடான 1 மூட்டை பொன்னி அரிசி நேற்றைய நிலவரப்படி ரூ1200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் முந்தைய விலை ரூ900. பொன்னி அரிசி விலை 1 மூட்டைக்கு ரூ300 உயர்ந்தது. பொன்னி பச்சை அரிசி விலையானது ரூ1250க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் முந்தைய விலை ரூ1050. அதாவது பொன்னி பச்சை அரிசி விலை ரூ200 என்ற அளவுக்கு உயர்ந்தது. பாசுமதி அரிசியின் விலை ரூ300 அளவுக்கு உயர்ந்தது. 1 மூட்டை பாசுமதி அரிசி விலை ரூ2200-ல் இருந்து ரூ2500க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நெல் மற்றும் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20% வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு சில குறிப்பிட்ட ரக அரிசிகளுக்கு மட்டும் எனவும் மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் வரி விதிப்பான பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவே இந்த 20% வரி விதிக்கப்பட்டதா? அல்லது அரிசி கையிருப்பில் ஏதேனும் பிரச்சனையா? என்கிற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications