இந்தியாவில் யாருக்குமே குரங்கு அம்மை பாதிப்பு இல்லை! மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் கடிதம்!
டெல்லி: இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என்றும் குரங்கு அம்மை பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மேலும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள ஆய்வகங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் அதிவேகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது குரங்கு அம்மை பாதிப்பு. குரங்கு அம்மை (Monkeypox) நோய், ஒரு தீவிரமான வைரஸ் பாதிப்பாகும். இது வழக்கமாக 2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும் காலவரம்புக்கு உட்பட்ட நோயாகும். குறிப்பிடத்தக்க சுகாதார சூழல் உடையவர்களுக்கோ அல்லது இல்லாதவர்களுக்கோ தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குரங்கு அம்மை பாதிப்பு என்பது காய்ச்சல், தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்), தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவற்றின் மூலம் அறிய முடியும். குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால் · கண் வலி அல்லது பார்வை மங்குதல்; மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம்; உணர்வு மாற்றம், வலிப்பு; சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.
குரங்கு அம்மை பாதிப்பானது ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள்,
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண்கள் ஆகியோரை கடுமையாக தாக்கும் அபாயம் உள்ளது. நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும். பாலியல் தொடர்பு உட்பட உடல் ரீதியான தொடர்புகள் மூலமாக உடலில் இருந்து வெளியேறும் திரவங்களுடன் தொடர்பு அல்லது உடல் காயம் உள்ளிட்டவை மூலம் பரவும்.

இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை. அண்மையில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள ஒரு நாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்த ஒரு இளம் ஆணுக்கு அந்த நோய் இருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.
அவருக்குக் குரங்கு அம்மை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த நோயாளியின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
இதனிடையே குரங்கு அம்மை பரவுதல் தடுப்பு தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி வைத்துள்ளது. அதில், குரங்கு அம்மை நோய் பாதிப்பை கண்டறிய பரிசோதனை நிலையங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications