ஒரு முடிவோடுதான் இருக்காங்க! ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வு- 2 இந்திய மொழி கட்டாயம்- மத்திய பாஜக அரசு
டெல்லி: நாடு முழுவதும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கல்வி கொள்கைகள் நாடு முழுவதும் கிராமப்புற, ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய மாணவர்கள் மீது பெரும் சுமையை சுமத்துவதாக இருந்து வருகிறது. மத்திய அரசின் கல்வி கொள்கையானது நகர்ப்புற வசதி படைத்த மாணவர்களுக்கானதாக உருமாற்றப்பட்டுள்ளது என்பது கல்வியாளர்களின் குற்றச்சாட்டு.

இதனடிப்படையில்தான் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. நீட் நுழைவுத் தேர்வால் தமிழ்நாட்டின் பல்லாயிரக்கணக்கான ஏழை வீட்டு பிள்ளைகளின் மருத்துவ கனவு பறிக்கப்பட்டுவிட்டது. இந்த துயரத்தை தாங்க முடியாமல் அரியலூர் அனிதா தொடங்கி சென்னை ஜெகதீஸ் வரை மாண்டு போன மாணவர்கள் ஏராளம். இதனாலேயே நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது.
இந்நிலையில் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வு நடத்தப்படவேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அப்படி 2 பொதுத்தேர்வு நடத்தப்படும் போது எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாமாம்.
மேலும் 11,12-ம் வகுப்பு மாணவர்கள் இனி 2 மொழிப் பாடங்களைக் கட்டாயம் படிக்க வேண்டுமாம். அதில் ஒன்று இந்திய மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவை அனைத்தும் புதிய கல்விக் கொள்கைப்படி செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் ரத்து செய்துவிட்டன. ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்காக கல்விக் கொள்கையை உருவாக்குகின்றன. மேலும் கல்வி என்பது மாநிலப் பட்டியலுக்கே மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற குரலும் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications