கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை- மாணவர்கள் போராட்டம்- மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை அறிக்கை அனுப்ப வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா கொடூர சம்பவத்துக்கு நீதி கோரி நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பயிற்சி மருத்துவர்களின் பணிகளை முறைப்படுத்த வேண்டும் என்பது மருத்துவ மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று.

கொல்கத்தா படுகொலையில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்ட போதும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட ஆர்ஜி கர் மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இந்த சம்பவங்கள் கொல்கத்தாவில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே மருத்துவ மாணவர்கள் போராட்டம் தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமானது அனைத்து போலீசாருக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், நாட்டின் எந்த பகுதியில் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடந்தாலும் அப்பகுதியின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக 2 மணி நேரத்துக்கு ஒரு முறை மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த அறிக்கையை வாட்ஸ் அப், இ மெயில் மற்றும் ஃபேக்ஸ் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications