இந்தியாவில் ஏன் உங்க இயக்கத்தை தடை செய்யக் கூடாது? "விடுதலைப் புலிகளுக்கு" விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
டெல்லி: இந்தியாவில் உங்கள் இயக்கத்தை ஏன் சட்டவிரோத அமைப்பாக தடை செய்யக் கூடாது என விளக்கம் தர வேண்டும் 'அழித்தொழிக்"கப்பட்ட' விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் தாயக நிலப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒருங்கிணைத்து "தமிழீழம்" என்ற தனிநாட்டை யுத்தம் மூலம் பெறுவதற்காக 1976-ல் உருவாக்கப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். இந்தியாவில் 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் இந்தியாவில் பயங்கரவாத இயக்கமாக விடுதலைப் புலிகள் இயக்கம் பிரகடனம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

5 ஆண்டுகள் நீட்டிப்பு: இதனடிப்படையில் கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்தது. தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக அறிவிக்கையை கடந்த மாதம் 18-ந் தேதி வெளியிட்டிருந்தது.
புலிகள் மீது தடை ஏன்?: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடிப்பது தொடர்பான அறிவிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மக்களிடையே பிரிவினைவாதத்தை வளர்க்கிறது. இந்தியாவில்- தமிழ்நாட்டில் தங்களது ஆதரவு தளத்தை வலுப்படுத்துகிறது. ஆகையால் சட்டவிரோதச் செயல்கள் (தடுப்பு) சட்டம் 1967-ன் பிரிவு 3-ன் உட்பிரிவு 1,3 ஆகியவற்றைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள்: விடுதலைப் புலிகள் இயக்கமானது இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பாதகமான நடவடிக்கைகளில் இப்போதும் ஈடுபட்டு வருகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட விடுதலைப் புலிகள் இயக்கம் தங்களது தமிழர்களுக்கான சுதந்திர நாடு என்ற கோட்பாட்டை கைவிடவில்லை. தற்போது எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து மீண்டும் எழுச்சி பெறச் செய்யக் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் இந்த ஆதரவு குழுக்கள் பிரிவினைவாதத்தை வலுப்படுத்துகின்றன.
அகன்ற தனித் தமிழ்நாடு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனைத்து தமிழருக்குமான தனிநாடு (அகன்ற தனித் தமிழ்நாடு) என்ற கோட்பாடு இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாகும். இந்தியாவின் ஒரு பகுதியை இந்தியாவில் இருந்து பிரிப்பதற்கான நடவடிக்கையாகும். ஆகையால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
வைகோ கண்டனம்: இதற்கு மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ எம்பி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். வைகோ வெளியிட்ட அறிக்கையில், "2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பிறகும் விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. அதற்கான ஆதரவு மற்றும் நிதித்திரட்டல் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது" என்று தடை நீட்டிப்பு ஆணையில் குறிப்பிடுகிற இந்திய ஒன்றிய அரசு, "விடுதலைப்புலிகளின் இயக்கம் தமிழ்நாட்டில் ரகசியமாக செயல்படுகிறது. அனைத்து தமிழர்களுக்குமான தனி நாடு என்ற கோரிக்கையில் இந்தியாவில் தமிழ்நாட்டையும் சேர்த்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு புலிகளின் இயக்கம் எதிரானது மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது" என்ற அபாண்டமான பொய் குற்றச்சாட்டையும் புலிகள் அமைப்பின் மீது சுமத்தியுள்ளது என விமர்சித்திருந்தார்.
புலிகளுக்கு நோட்டீஸ்: இந்த நிலையில் மத்திய அரசின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயமானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், இந்தியாவில் உங்கள் இயக்கத்தை ஏன் சட்டவிரோதமாக அமைப்பாக பிரகடனம் செய்து தடை செய்யக் கூடாது என்பதை விளக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications