டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா அசுர வேகம்.. மக்களுக்கு ஷாக் கொடுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்.. என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணடைவர்களை விட கொரோனவால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய சுகாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார்.

தற்போது 16,79,000 ஆக இருக்கும் ஆக்டிவ் கேஸ்களில் இறப்புகளின் எண்ணிக்கை மட்டும் 10.2% கூர்மையான வளர்ச்சி கொண்டுள்ளது என்று ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2-வது அலையின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றினால் நாடு தத்தளிக்கிறது என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர்.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14.1 கோடியாக உயர்வு! உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14.1 கோடியாக உயர்வு!

கொரோனா தாக்கம்

கொரோனா தாக்கம்

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக
தினமும்,ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்து வருகின்றனர். இந்த தொற்றுநோயைத் தடுக்க மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. வார இறுதி நாட்களில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி உள்ளன

தடுப்பூசி போடப்படுகின்றன

தடுப்பூசி போடப்படுகின்றன

இது தவிர நாடு முழுவதும் தடுப்பூசி போட்டு வந்த போதிலும் கொரோனானாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணடைவர்களை விட கொரோனவால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய சுகாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார்.

பிரதமர் ஆலோசனை

பிரதமர் ஆலோசனை

நாட்டில் தற்போதுள்ள கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி நேற்று இரவு அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் பல துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:-

வளர்ச்சி அசுர வளர்ச்சி

வளர்ச்சி அசுர வளர்ச்சி

இந்தியாவில் தற்போது புதிய கொரோனா பாதிப்புகள் 7.6% வளர்ச்சியைக் கொண்டுள்ளது, இது 2020 ஜூன் மாதத்தில் பதிவான 5.5% வளர்ச்சியை விட 1.3 மடங்கு அதிகமாகும். தற்போது 16,79,000 ஆக இருக்கும் ஆக்டிவ் கேஸ்களில் இறப்புகளின் எண்ணிக்கை மட்டும் 10.2% கூர்மையான வளர்ச்சி கொண்டுள்ளது. தினசரி புதிய பாதிப்புகளும், தினசரி புதிய குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் குணமடைபவர்களை விட புதியதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதை தரவுகள் பிரதிபலிக்கிறன.

கூடுதல் வென்டிலேட்டர்கள்

கூடுதல் வென்டிலேட்டர்கள்

ஆறு மாநிலங்களுக்குமட்டும் கூடுதலாக 6,303 வென்டிலேட்டர்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதாவது மகாராஷ்டிராவிற்கு 1121 வென்டிலேட்டர்கள், உத்தரபிரதேசத்திற்கு 1700, ஜார்கண்டிற்கு 1500, குஜராத்திற்கு 1600, மத்திய பிரதேசத்திற்கு 152, சத்தீஸ்கருக்கு 230 வென்டிலேட்டர்கள் வழங்கியுள்ளன என்று ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் மாநிலங்களை அறிவுறுத்திய பிரதமர் மோடி கடந்த ஆண்டை போல தற்போதும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனவை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

English summary
Federal Health Minister Harshwardhan has given a shocking report that the number of people affected by coronavirus is increasing in India more than coroners
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X