6%.. தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. மத்திய அரசு சொன்ன முக்கிய அறிவுரை..பரபர கடிதம்! என்னாச்சு?
டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய சுகாதரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை அவசரமாக எழுதியுள்ளார். இந்தியாவில் தினசரி நோய் பாதிப்பு விகிதத்தை விட தமிழ்நாட்டில் கொரேனா பாதிப்பு விகிதம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களை சுட்டிக்காட்டி மத்திய சுகாதாரத்துறை அறிவுரைகளுடன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மொத்தம் 8 மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு ராஜேஷ் பூஷன் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் தமிழ்நாடு அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் கொரோனா கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் எந்த நிலையிலும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக கவலைக்குரிய பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பு விகிதம் 5.5 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நோய் பாதிப்பு விகிதம் 6 சதவீதமாக இருக்கிறது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும். நோய் பாதிப்பை கண்டறிதல், பரிசோதனைகளை அதிகரித்தல், நோய் பாதித்தவர்களை கண்காணித்தல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மாவட்ட வாரியாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கான விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications