2 வாரங்கள் நீட்டிப்பு.. லாக்டவுன் உத்தரவை மீறினால் என்ன தண்டனை தெரியுமா? மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: நாடு முழுக்க, மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு மே 17ஆம் தேதி வரை மக்கள் இப்போதுள்ள நெறிமுறைகளை பின்பற்றுமாறு மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
Recommended Video
இருப்பினும், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மூன்று மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு ஏற்றவாறு கெடுபிடிகள் அறிவிக்கப்பட்டன.

இதில், சிவப்பு மண்டலம் மிகவும் அதிகமான கெடுபிடிகளுடன் இருக்கும். இருப்பினும் இப்போது உள்ள நிலைமையை விட சற்று தளர்வு செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களில் பயணிக்க முடியும், முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்பட கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள், அனைத்து மண்டலங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளன.
ஒருவேளை இந்த கட்டுப்பாடுகளை மீறினால், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அரசின் இந்த உத்தரவை 2005ம் ஆண்டு, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அனைத்து பொது இடங்களிலும் முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம். சமூக இடைவெளியை பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டும். 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களை ஒரே இடத்தில் கூடசெய்ய எந்த ஒரு அமைப்புக்கும் உரிமை கிடையாது.
திருமணங்கள் உள்ளிட்ட உறவினர்கள் கூட கூடிய நிகழ்வுகள் என்றால் சமூக இடைவெளி பின்பற்றப்படவேண்டும். அதிகபட்சம் 50 விருந்தினர்கள் மட்டுமே அதில் பங்கேற்க வேண்டும். இறுதிச் சடங்கு போன்ற நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அங்கும் சமூக இடைவெளி என்பது பராமரிக்கப்பட வேண்டும்.
பொது இடங்களில் துப்புவது, அபராதத்துடன் கூடிய குற்றச் செயலாகும். மதுபானம், புகையிலை, பான், குட்காவை பொது இடங்களில் பயன்படுத்துவது அனுமதிக்கப்படமாட்டாது.
மதுபானம், குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்யக்கூடிய கடைகள் அதிகபட்சம் 6 அடி இடைவெளியில் வாடிக்கையாளர்களை நிற்க வைத்து விற்பனை செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் கடையில் கூட அனுமதிக்க கூடாது.
அனைத்து மாவட்ட கலெக்டர்களும் இந்த உத்தரவை உரிய வகையில் செயல்படுத்த பொறுப்பாளிகள் ஆவர். இந்த விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது 2005ம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டப் பிரிவு 51 முதல் 60 வரையிலான விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 கீழும் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications