அங்கிட்டு காஷ்மீரில் தேர்தல்.. இங்கிட்டு லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்-மோடி வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டசபை தேர்தலை சந்திக்கும் நிலையில் மற்றொரு யூனியன் பிரதேசமான லடாக்கில் மத்தியில் ஆளும் பாஜக அரசு 5 புதிய மாவட்டங்களை இன்று உருவாக்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாவட்டங்கள் உருவாக்கத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

லடாக் புதிய மாவட்டங்கள் தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை: வளர்ந்த மற்றும் முன்னேற்றம் கொண்ட லடாக்கை உருவாக்குவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வையைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசத்தில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Ladakh jammu kashmir

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவைப் பற்றி 'சமூக ஊடக எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த முடிவின் மூலம், புதிய மாவட்டங்களான ஜான்ஸ்கர், திராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகியவை நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை தங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லும் என்று கூறியுள்ளார். இந்த ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, இப்போது லடாக்கில் லே மற்றும் கார்கில் உட்பட மொத்தம் ஏழு மாவட்டங்கள் இருக்கும் என்று கூறியுள்ளார்.

லடாக் பரப்பளவின் அடிப்படையில் மிகப் பெரிய யூனியன் பிரதேசமாகும். தற்போது, லடாக்கில் லே மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் உள்ளன. இது இந்தியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். மிகவும் கடினமானதாகவும், அணுக முடியாததாகவும் இருப்பதால், தற்போது மாவட்ட நிர்வாகம் அடிமட்ட அளவில் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கிறது. இந்தப் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, இப்போது மத்திய அரசு மற்றும் லடாக் நிர்வாகத்தின் அனைத்து பொது நலத் திட்டங்களும் மக்களை எளிதாக அடைய முடியும், மேலும் அதிகமான மக்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உள்துறை அமைச்சகத்தின் இந்த முக்கியமான முடிவு லடாக்கின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு "கொள்கை அளவிலான ஒப்புதல்" வழங்குவதோடு, புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான தலைமையகம், எல்லைகள், கட்டமைப்பு, பதவிகளை உருவாக்குதல், மாவட்ட உருவாக்கம் தொடர்பான வேறு எந்த அம்சத்தையும் மதிப்பீடு செய்ய ஒரு குழுவை அமைக்குமாறு லடாக் நிர்வாகத்தை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்ற பிறகு, லடாக் யூனியன் பிரதேசம் இந்த அறிக்கையின் அடிப்படையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான இறுதி முன்மொழிவை மேல் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும்.

லடாக் மக்களுக்கு மகத்தான வாய்ப்புகளை உருவாக்க மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதையொட்டி லடாக் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகிய புதிய மாவட்டங்கள் இப்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு, சேவைகளையும் வாய்ப்புகளையும் மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வரும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் எக்ஸ் பதிவைப் பகிர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவது சிறந்த நிர்வாகம் மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு நடவடிக்கையாகும். ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகியவை இப்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு, சேவைகளையும் வாய்ப்புகளையும் மக்களுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரும். அங்குள்ள மக்களுக்கு வாழ்த்துக்கள்".

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+