கொஞ்சம்கூட கேப் விடாமல் பற்ற வைக்கும் அமித்ஷா- இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பை தொடங்கி வைக்கிறாராம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தி மொழி தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழு அளித்த பரிந்துரைகள், இந்தி பேசாத தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இந்த நெருப்பு அணைவதற்கு முன்னரே மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பை வரும் 16-ந் தேதி தொடங்க வைக்கப் போகிறாராம் அமித்ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக் குழு தமது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கியது.
அப்பரிந்துரைகளில், அனைத்து தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களில் இந்தி மொழிதான் பயிற்று மொழியாகவும் இதர பயன்பாடுகளுக்கான மொழியாகவும் இருக்க வேண்டும்; ஆங்கில மொழியை பயன்படுத்துவது ஆப்ஷனலாக மட்டுமே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலத்துக்கு பதில் இந்தி

ஆங்கிலத்துக்கு பதில் இந்தி

ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள், ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா விதியாலயாக்கள், மத்திய பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் இந்தி மொழி பயிற்று மொழியாக கட்டாயமாக்க வேண்டும். தேவைப்பட்டால்தான் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக பயன்படுத்தலாம்; காலப்போக்கில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயீற்று மொழியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்கிறது அமித்ஷா குழுவின் பரிந்துரை. அதேபோல், வேலைவாய்ப்பு தேர்வுகளிலும் இந்தி மொழி அவசியமாக்கப்பட வேண்டும். பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தி மொழி அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிறது இக்குழு பரிந்துரை. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டும்.

நீதிமன்ற மொழி

நீதிமன்ற மொழி

இந்தி பேசும் மாநிலங்களில் உயர்நீதிமன்றத்தில் இந்தி இடம்பெற வேண்டும்; அரசியல் சாசன தேவை ஏற்பட்ட்டால் மட்டுமே ஆங்கில மொழி பெயர்ப்பை பயன்படுத்த வேண்டும்; விளம்பரங்கள் அனைத்தும் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் இடம்பெற வேண்டும் எனவும் அமித்ஷா குழு பரிந்துரைத்துள்ளது.

தமிழகம், கேரளா எதிர்ப்பு

தமிழகம், கேரளா எதிர்ப்பு

அமித்ஷா குழுவின் இந்த பரிந்துரைகள் தமிழகம், கேரளா உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழகத்தில் மொழிப் போர் மீண்டும் வெடிக்கும் என்றும் இந்தியா சிதறுண்டு போகும் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். தமிழகம், கேரளா முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகியோரும் அமித்ஷா குழுவின் பரிந்துரையை எதிர்த்திருந்தனர்.

இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பு

இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பு


இந்த பஞ்சாயத்து இன்னமும் ஓயாத நிலையில், அடுத்த பிரச்சனை வெடித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல் முறையாக இந்தி மொழியில் மருத்துவம் - எம்.பி.பி.எஸ். படிப்பை தொடங்கி வைக்கப் போகிறார் அமித்ஷா. இந்தியாவிலேயே முதல் முறையாக இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்பு தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+