Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெபி நட்டா கைக்கு வந்த ராஜ்யசபா தலைவர் பதவி.. அவை முன்னவராக நியமனம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாநிலங்களவை பாஜக தலைவராக ஜெபி நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். பியூஷ் கோயலுக்குப் பதிலாக அந்தப் பொறுப்புக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தேசிய தலைவராக இருந்து வரும் ஜெ.பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய கேபினட்டில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், ராஜ்யசபா தலைவராக அதாவது அவை முன்னவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

JP Nadda BJP Rajyasabha

மாநிலங்களவை தலைவராக இருந்த பியூஷ் கோயல் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மும்பை வடக்கு லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராகி உள்ளார். இந்நிலையில், அவர் வகித்து வந்த ராஜ்யசபா தலைவர் பதவிக்கு ஜெபி நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பியூஷ் கோயல் வகித்த சபை முன்னவர் பதவி, ஆளுங்கட்சியை ராஜ்யசபாவில் தலைமை ஏற்று நடத்தும் முக்கியமான பதவி. தற்போது அந்த பதவி நட்டாவுக்கு கிடைத்துள்ளது.

பாஜகவின் தேசிய தலைவராக ஜெபி நட்டாவின் பதவிக் காலம் கடந்த ஜனவரியிலேயே முடிவுக்கு வந்தாலும் லோக்சபா தேர்தலுக்காக ஏற்கனவே நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் ஜெபி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், அவருக்கு மத்திய அமைச்சராகவும், ராஜ்யசபா தலைவராகவும் பொறுப்புகள் கிடைத்துள்ளன.

இமாச்சல பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட ஜெகத் பிரகாஷ் நட்டா, கடந்த 1960ஆம் ஆண்டு, பீகாரில் உள்ள பாட்னாவில் பிறந்தவர். பாட்னா பல்கலைக்கழகத்தில் பி.ஏ முடித்த பிறகு, இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி படித்தார். தனது இளம் வயதில் ஜெய் பிரகாஷ் நாராயணின் இயக்கங்களில் தீவிரமாக பங்கேற்றார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏ.பி.வி.பி) இணைந்து செயல்பட்டு வந்தார். கடந்த 1989இல் ஏ.பி.வி.பி-யின் தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1991 இல், பாஜக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 1993 ஆம் ஆண்டில், அவர் முதன்முறையாக இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இமாச்சல பிரதேச எதிர்க்கட்சித் தலைவரானார்.

கடந்த 1998இல் மீண்டும் சட்டரப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இமாச்சல் பிரதேச பாஜக அரசில் சுகாதாரத்துறை அமைச்சரானார். கடந்த 2010 ஆம் ஆண்டில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2012இல் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு, தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெற்றது.

இச்சூழலில், அண்மையில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் குஜராத் மாநிலத்தில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஜேபி நட்டா. இதற்கிடையே கடந்த 2019ஆம் ஆண்டு, ஜூன் மாதம், ஜேபி நட்டா, பாஜகவின் தேசிய செயல் தலைவராகவும், 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், பாஜகவின் தேசியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில், அவர் மத்திய அமைச்சராகவும், ராஜ்யசபா அவை முன்னவராகவும் பொறுப்பேற்றுள்ளார் நட்டா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+