இந்தியாவில் தள்ளிப்போகும் 5ஜி சேவை.. ரூ.1.50 லட்சம் கோடி ஏலம்! மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்
டெல்லி: இந்தியாவில் 5ஜி சேவை செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என்று மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது அக்டோபர் மாதம் சேவை தொடங்கும் என்று அவர் அறிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் 5ஜிக்கான ஏலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினட் குழு கடந்த மாதங்களுக்கு முன்பாக ஒப்புதல் வழங்கியது. உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் செல்போன் தொழில்நுட்பம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்கிறது.
வளர்ச்சிக்கு ஏற்ப இணையதள வேகத்தை அதிகரிக்க அலைவரிசையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 5ஜி அலைவரிசை மூலம் சேவைகள் கிடைத்தால் தற்போது அமலில் உள்ள 4ஜி அலைவரிசையை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இணையதள வசதிகளும் 3ஜியை விட 30 மடங்கு அதிக வேகத்தில் இணைய வசதிகளும் நமக்கு கிடைக்கும். இந்தியாவில் 5ஜி சோதனை சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.

5 ஜி ஏலம்
இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் - ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்குபெற்றன. முதல் நாளன்று 4 சுற்றுகளாக 5ஜி ஏலம் நடைபெற்று உள்ளது. இதுவரை நடந்து முடிந்த 40 சுற்று ஏலத்தில் 4 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியதாக மத்திய தொழில்நுட்பத்துறை தெரிவித்து இருந்தது

நிறுவனங்கள் ஆர்வம்
இந்த ஏலத்தில் 600, 700, 800, 900, 1800, 2100, 2300, 2500, 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகா ஹெர்ட்ஸ் பேண்டுகள் இடம்பெற்று உள்ளன. இதில் குறிப்பாக 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசையை வாங்க கடுமையாக போட்டியிட்டதாக அவர் மத்திய தொழில்நுப்டகூறி உள்ளார். அதேபோல் 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையை வாங்கவும் அவர்கள் ஆர்வம் காட்டினர்

ஏலத்தில் சாதனை
முதல் நாள் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டனர். இது கடந்த 2015 ல் நடைபெற்ற 4ஜி ஏலத்தின் சாதனையை முறியடித்து இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். 40 வது சுற்று ஏலம் முடிந்துள்ள நிலையில் இதுவரை மொத்தம் ரூ.1,50,173 கோடி ஏலத்தை மத்திய அரசு பெற்று இருக்கிறது.

தள்ளிப்போகும் சேவை
5ஜி அலைவரிசையை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியை ஆகஸ்டு 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், அக்டோபர் மாதத்தில் 5ஜி சேவைகள் தொடங்கும் எனவும் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் கூறினார். இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர் தெரிவிக்கையில் அக்டோபர் மாதம் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications