ஆந்திரா பெண்ணாறு-தமிழ்நாட்டின் கல்லணை, காவிரி-வைகை, குண்டாறு இணைப்பு திட்ட அறிக்கை ரெடி: மத்திய அரசு
பெண்ணாறு- காவிரி உள்ளிட்ட நதிநீர் இணைப்புகள் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி: ஆந்திராவின் பெண்ணாறு- தமிழ்நாட்டின் கல்லணை இணைப்பு மற்றும் காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு ஆகியவை தொடர்பான ட் திட்ட அறிக்கைகள் நிறைவடைந்துவிட்டதாக மத்திய பாஜக அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு ஜல் சக்தித்துறை இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு எழுத்து மூலம் அளித்த பதில்:
*1980-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், 30 நதிகள் இணைப்பு (16 சமவெளிப் பிரதேசத்திலும் 14 இமாலயப் பிரதேசத்திலும்) அடையாளம் காணப்பட்டன. இவை தேசிய நீர் மேம்பாட்டு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களில் ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றோடு தொடர்புடைய பெண்ணாறு (சோமசீலா)-காவேரி (கல்லணை) இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை பூர்த்தி அடைந்துள்ளது. இதேபோல் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றோடு தொடர்புடைய காவேரி (கட்டளை)-வைகை-குண்டாறு இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கைப் பூர்த்தி அடைந்துள்ளது.
நதிகள் இணைப்புத் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தண்ணீர் பகிர்வு, தேவைப்படும் சட்டபூர்வமான ஒப்புதல்கள் கிடைத்தபின் அமலாக்க கட்டம் தொடங்கும் என்று அமைச்சர் கூறினார். இந்தத் திட்டங்களைப் பொருத்தவரை, பூர்த்தி செய்வதற்கு கால வரம்பு நிர்ணயிப்பது சிரமம் என்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இடையே நீர்ப் பங்கீடு மற்றும் பிற பிரச்சனைகளில் ஒருமித்தக் கருத்து எட்டப்படுவதைக் பொருத்தே முடிவு செய்யப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு கூறினார்.
மேலும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து தொடர்பான கேள்விக்கு ஜல்சக்தித் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் அளித்த பதில்: உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த 24 மாநிலங்களில் 111 நீர்வழிப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய நீர்வழிப் பாதைகள் சட்டம் 2016-ன் படி இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் தேசிய நீர்வழிப் பாதை 4-ல், வடக்கு பக்கிங்காம் கால்வாய் (பெத்தகஞ்சம் முதல் சென்னை மத்திய ரயில் நிலையம் வரை -316 கிலோ மீட்டர்), தெற்கு பக்கிங்காம் கால்வாய் (சென்னை மத்திய ரயில் நிலையம் முதல் மரக்காணம் வரை -110 கிலோ மீட்டர்), மரக்காணம் முதல் புதுச்சேரி வரை (கழுவேலிக் குளம் வழியாக -22 கிலோ மீட்டர்) இடம் பெற்றுள்ளது.
தேசிய நீர்வழிப் பாதை 20-ல் பவானி ஆறு (95 கிலோ மீட்டர்), 55-ல் காவேரி-கொள்ளிடம் ஆறு (311 கிலோ மீட்டர்), 69-ல் மணிமுத்தாறு (5 கிலோ மீட்டர்), 75-ல் பாலாறு (142 கிலோ மீட்டர்), 77-ல் பழையாறு (20 கிலோ மீட்டர்), 80-ல் பொன்னியாறு (126 கிலோ மீட்டர்), 99-ல் தாமிரபரணி ஆறு (62 கிலோ மீட்டர்) ஆகியவை நீர்வழிப் பாதைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications