வெளிநாட்டினர் மீது வெறுப்பை காட்டும் இந்தியா? வாயைவிட்டு வாங்கி கட்டிய ஜோ பைடன்.. ஜெய்சங்கர் சுளீர்
டெல்லி: அந்தியர்கள் மீதான் வெறுப்பை காட்டும் நாடுகள் என இந்தியாவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு உடனடியாக வெள்ளை மாளிகை விளக்கம் தந்த நிலையில் மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜோபைடனுக்கு பதிலடி தந்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் உள்ளார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிட முடிவு செய்ய உள்ளார்.

அதேபோல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்க தயாராகி வருகிறார். கடந்த தேர்தலில் அதிபர் டொனால்ட் ட்ரம்பை, ஜோடைபன் வீழ்த்தி அரியணை ஏறினார். இந்த முறையும் அவர்கள் 2 பேர் இடையே தான் போட்டி நிலவ உள்ளது. இருவரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் ஜோபைடன் தேர்தலுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். ஆசியாவை பூர்வீகமாக கொண்டவர்களிடம் நிதி திரட்டியபோது, ‛‛எங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைய நீங்களும், உங்களை போன்ற பலரும் தான் காரணம். ஏனென்றால் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வருவோரை எங்கள் நாடுகளில் வரவேற்கிறோம். அதுவே எங்கள் வளர்ச்சிக்குக் காரணம். சீனா ஏன் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் ஸ்தம்பித்து நிற்கிறது. ஜப்பான் இப்போது ஏன் சிக்கலில் இருக்கிறது?
ஏன் ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வெளிநாட்டில் இருந்து வருவோரைப் பாகுபாட்டுடன் (xenophobic) நடத்துகிறது. அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் புலம்பெயர்ந்தவர்களை விரும்பவில்லை. ஆனால், அதே புலம்பெயர்ந்தவர்கள் தான் எங்களை வலிமையாக்குகிறார்கள்" என்றார். இந்தியா பற்றி ஜோபைடன் இப்படி கூறியிருப்பது தான் விவாதத்தை கிளப்பியது.
இதையடுத்து வெள்ளை மாளிகை தரப்பில், ‛‛அமெரிக்க அதிபர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உலகெங்கிலும் உள்ள மக்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். உலகிலேயே அமெரிக்கா தான் புலம்பெயர்ந்தவர்களைப் பெரியளவில் ஆதரிக்கும் நாடாக உள்ளது. அமெரிக்கா மற்ற நாடுகளில் இருந்து குடியேறியவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நாடாகும். மற்றவர்களை ஏற்கும் பண்பு எங்கள் டிஎன்ஏவிலேயே இருக்கிறது'' என்பதை தான் அப்படி கூறியுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: இந்தியா எப்போது பல்வேறு தரப்பை சேர்ந்த மக்களை வரவேற்கும் வகையில் தான் உள்ளது. அமெரிக்க அதிபர் சொல்வதில் உண்மையில்லை. ஏனென்றால் நம் நாட்டு பொருளாதாரம் ஒன்றும் தடுமாற்றத்தில் இல்லை. விரைவில் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாற உள்ளது.
மேலும் இந்தியா எப்போதுமே மிகவும் தனித்துவமிக்க நாடாகவே இருந்து வருகிறது. உண்மையிலேயே உலக வரலாற்றில் இந்தியா தான் திறந்த மனப்பான்மை கொண்ட நாடு னெ்று நான் கூறுவேன். இங்கு தான் பல தரப்பு மக்கள் வருகின்றனர். பிற நாடுகளில் சிக்கலில் தவிப்பவர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுப்பதற்காக தான் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளது'' என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications