பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா?
டெல்லி: பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் புகார்களை பெண்கள், பிரபலங்கள் என அனைவரும் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். இதனால் இந்தியாவே பரபரப்பான சூழலில் உள்ளது.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம் ஜே அக்பர் தனக்கு பாலியல் சீண்டல் விடுத்ததாக அமெரிக்காவை சேர்ந்த சிஎன்என் தொலைக்காட்சி பத்திரிகையாளர் மஜ்லியே புவே கம்ப் புகார் தெரிவித்துள்ளார்.

அக்பர் அறை
இவர் கூறுகையில், 2007-ஆம் ஆண்டு 18 வயதாக இருக்கும் போது ஏசியன் ஏஜ் என்ற பத்திரிகையில் இன்டர்ன்ஷிப் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அதன் ஆசிரியராக இருந்தவர் எம்.ஜே. அக்பர். அப்போது மறுநாள் பத்திரிகையின் முதல் பக்கத்தில் இடம்பெறவுள்ள செய்தி, படங்கள் குறித்து ஒப்புதல் பெற அக்பரின் அறைக்கு சென்றேன்.

முத்தம்
அப்போது அக்பர் பார்த்த பார்வையே சரியில்லை. பின்னர் எனது இருக்கைக்கு வந்து தோள்பட்டையில் கையை வைத்து எனக்கு முத்தம் கொடுத்தார். மேலும் அவரது நாக்கை எனது வாய்க்குள் செலுத்தினார். என்னால் எதையும் செய்யவில்லை என்று அந்த பெண் பத்திரிகையாளர் ஹப்போஸ்ட் இந்தியா என்ற ஊடகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார்.

தகவல்கள்
இது பெரும் புயலை கிளப்பியது. இந்நிலையில் அக்பர் மீது 10-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் மீ டூ மூலம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மின்னஞ்சலில் ராஜினாமா கடிதத்தை அக்பர் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதவி ராஜினாமா
அதுபோல் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications