பயப்படாதீங்க! மின்தடை பீதி வேண்டாம்! போதிய நிலக்கரி இருப்பில் உள்ளது! நம்பிக்கையளிக்கும் மத்திய அரசு
டெல்லி : இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும் என யாரும் பீதி அடையத் தேவையில்லை எனவும், நாட்டுக்கு தேவையான நிலக்கரியை சப்ளை செய்வோம் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் தற்போது கோடையின் தாக்கம் உச்சம் தொட்டுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் வெட்டு பிரச்னை எழுந்துள்ளது.
குறிப்பாக, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல இடங்களில் 10 மணிநேர மின்வெட்டு ஏற்படுவதாகவும், இதனால் மக்கள் அன்றாட தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

கடும் மின் தடை
இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கு முறையாக மின் விநியோகம் கிடைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்ய மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் வரலாறு காணாத அளவு மின் நுகர்வு அதிகரித்துள்ளதாகவும், அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர் பிரஹலாத் ஜோஷி
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு நிலக்கரி விநியோகம் செய்வது தொடர்பாகவும், மின்வெட்டு தொடர்பாகவும் கோல் இந்தியா நிலக்கரி நிறுவனமும், நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியும் விளக்கம் அளித்துள்ளனர். அதில், நாட்டில் நிலக்கரி தட்டுபாடு ஏதும் நிலவவில்லை எனவும், மின் உற்பத்தி நிலையங்களில் தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததே பற்றாக்குறைக்கு காரணம் எனக் கூறியுள்ளனர்.

பீதி வேண்டாம்
இதனிடையே இந்தியாவில் நிலக்கடி தட்டுப்பாடு ஏற்படும் என யாரும் பீதி அடையத் தேவையில்லை எனவும், நாட்டுக்கு தேவையான நிலக்கரியை சப்ளை செய்வோம் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். பிரபல செய்தி நிறுவனமான ஏஎஐயிடம் பேசிய அவர், " என்னைப் பொறுத்தவரை, நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும் என யாரும் பீதி அடையத் தேவையில்லை. அரசாங்கம் தினசரி அடிப்படையில், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் நிலைமையை கண்காணித்து வருகிறது.

நிலக்கரி இருப்பு உள்ளது
நாட்டுக்கு தேவையான நிலக்கரியை கண்டிப்பாக சப்ளை செய்வோம். ஏப்ரல் 25 நிலவரப்படி, அனல் மின் நிலையங்களில் 21.55 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளது - அனல் மின் நிலையங்களில் கிட்டத்தட்ட 9-9.5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு உள்ளது. இந்த பங்கு தினசரி அடிப்படையில் நிரப்பப்படுகிறது. கோல் இந்தியாவுடன் இணைந்து, எங்களிடம் 72.5 மில்லியன் டன்கள் கையிருப்பு உள்ளது" என பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications