லவ்டுடே படத்தில் வருமே அந்த அளவு மோசம்.. நடிகை ராஷ்மிகா ஃபேக் ஆபாச வீடியோ.. மத்திய அமைச்சர் வார்னிங்
டெல்லி: பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து டீப் ஃபேக் என்ற தொழில்நுட்பம் மூலம் ஆபாச வீடியோ எடிட் செய்து பரபரப்பட்ட விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களுக்கு மத்திய தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. கார்த்தி நடித்த சுல்தான், விஜய் நடித்த வாரிசு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வந்தது.

லண்டனை சேர்ந்த இன்ஸ்டிராகிராமில் பிரபலமான ஒருவர் லிப்டில் சென்றபோது அரைகுறை ஆடை அணிந்து இருந்தார். அந்த பெண்ணின் வீடியோவை எடுத்து அதில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மட்டும் வைத்து எடிட் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்கள். இந்த தொழில்நுட்பத்தை டீப் ஃபேக் என்று அழைக்கிறார்கள். அதாவது உண்மை போன்றே தெரியும்போலி. முன்பெல்லாம் போட்டோஷாப் போன்ற செயலிகள் மூலம் புகைப்படங்களில் முகத்தை மாற்றி எடிட் செய்து வெளியிட்டார்கள். ஆனால், இந்த செயற்கை நுண்ணறிவு காலத்தில் எளிதில் போலி வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு விடுகிறார்கள். இப்படி பல போலி வீடியோக்கள் உண்மை போன்றே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
PM @narendramodi ji's Govt is committed to ensuring Safety and Trust of all DigitalNagriks using Internet
— Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI) November 6, 2023
Under the IT rules notified in April, 2023 - it is a legal obligation for platforms to
➡️ensure no misinformation is posted by any user AND
➡️ensure that when reported by… https://t.co/IlLlKEOjtd
அப்படிதான் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோவையும் எடிட் செய்து பரப்பி இருக்கிறார்கள். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த நடிகர் அபிஷேக் பச்சன், "டீப் பேக் வீடியோக்களை தடுக்க இந்தியாவில் உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். இன்ஸ்டாகிராமில் நீங்கள் பார்த்த இந்த ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ, ஜாரா பட்டேலின் டீப் பேக் வீடியோவாகும்." என்று குறிப்பிட்டு இருந்தார். அபிஷேக்கின் இந்த ட்வீட்டை அவரது தந்தையும் பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சனும் ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளதாவது, "பிரதமர் மோடி தலைமையிலான அரசு இணைய பயன்பாட்டாளர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தி வருகிறது. ஐடி விதிகளின்படி சமூக வலைதளங்கள் உண்மையான பதிவுகள் பகிரப்படுகிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். தவறானவை பகிரப்பட்டால் 36 மணி நேரங்களில் அவை நீக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இந்த விதிகளின் கீழ் நிறுவனங்கள் நடக்காவிட்டால் ஐபிசி விதிகளின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். டீப் ஃபேக் வீடியோக்கள் மிகவும் மோசமானவை." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications