ஓட்டுநர் உரிமம், எல்எல்ஆர் காலாவதியாச்சா.. நோ டென்சன்! பிப்ரவரி 29 ஆம் தேதி வரை அவகாசம் இருக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சாரதி இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக எல்.எல்.ஆர், ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம் செல்லுபடியாகும் காலத்தை பிப்ரவரி 29 ஆம் தேதி வரை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நீட்டித்து இருக்கிறது.

ஓட்டுநர் உரிமம், எல்.எல்.ஆர், நடத்துனர் உரிமம் போன்ற ஆவணங்களை பதிவு செய்வதற்கும், உரிமத்தை நீட்டிப்பதற்கும் சாரதி என்ற இணையதளத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நடத்தி வருகிறது. இந்த அடையாள அட்டைகளை வழங்கும் சாரதி இணையதளத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு உள்ளன. இதன் காரணமாக எல்.எல்.ஆர்., ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலத்தை இந்த பிப்ரவரி 29 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

Union Ministry of Road Transport has extended the validity period of LLR, Driving License

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை சாரதி இணையதளத்தில் தொழில்நுட்ப பிரச்சனைகள் தொடர்ந்து இருக்கின்றன. இதன் காரணமாக உரிமம் தொடர்பான சேவைகளைப் பெற முடியாமல் விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டனர். இதனை தங்கள் சுற்றறிக்கையில் குறிப்பிட்டு இருக்கும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், இதன் காரணமாக காலாவதியான எல்.எல்.ஆர், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமங்கள் பிப்ரவரி 29 ஆம் தேதி வரை அபராதம் எதுவும் வசூலிக்காமல் செல்லுபடியாகும் அறிவித்து உள்ளது.

இணையதள சேவைகள் பகுதி அளவில் நிறுத்தி வைக்கப்பட்டதால், கட்டணம் செலுத்துதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், எல்.எல்.ஆர்., பதிவு, ஓட்டுநர் திறன் தேர்வு ஆகிய சேவைகளை விண்ணப்பதாரர்கள் பெற முடியவில்லை என்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

பரிவாகன் இணையதள சேவை பாதிக்கப்பட்ட காலத்தில் மக்கள் எதிர்கொண்ட சிரமங்களை கருத்தில் கொண்டே ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் காலாவதியான எல்.எல்.ஆர், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று இவற்றை போக்குவரத்து அதிகாரிகளும் மேற்குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் காலாவதியான ஆவணங்கள் பிப்ரவரி 29 ஆம் தேதி செல்லுபடியாகும் என கருதுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+