Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

33% மகளிர் இட ஒதுக்கீடு! ராஜ்யசபாவில் நிறைவேறியது ஓகே.. ஆதரவாக எத்தனை வாக்கு! எதிராக எத்தனை வாக்கு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டிற்கு வழங்கும் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறி இருக்கும் நிலையில், ஆதரவாகவும் எதிராகவும் விழுந்த வாக்குகள் குறித்துப் பார்க்கலாம்.

இப்போது மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டியுள்ளது. இந்தக் கூட்டம் முதலில் பழைய நாடாளுமன்றக் கூட்டத்தில் தொடங்கிய நிலையில், அதன் பிறகு இது புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

 Unlike in loksabha, No one voted against Women Reservation bill in Rajya sabha

நாடாளுமன்றத்தின் முதல் நாளன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்கப் போவதாகக் கூறியிருந்தார். அன்றைய தினமே பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தரப்பட்டது.

பெண்கள்: சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மசோதா நிலுவையில் இருந்த நிலையில், மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்தது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. தற்போது லோக்சபா மற்றும் மாநிலச் சட்டசபைகளில் பெண்கள் பிரதிநிதித்துவம் ரொம்பவே குறைவாக இருக்கிறது. லோக்சபாவில் இப்போது 15% குறைவான பெண் எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். பல மாநிலச் சட்டசபைகளில் நிலைமை மேலும் மோசம் 10% குறைவாகவே பெண்கள் உள்ளனர். தமிழ்நாடு சட்டசபையிலும் கூட 10% குறைவாகவே பெண்கள் உள்ளனர்.

இந்தப் பிரச்சினையைச் சரி செய்யும் வகையிலேயே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதா மூலம் லோக்சபா மற்றும் மாநிலச் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கும் அதே பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்படும். இவையும் சுழற்சி முறையிலேயே வழங்கப்படும்.

மசோதா: பாலின சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசு நிர்வாகத்திற்கு இது மிகப் பெரியளவில் கை கொடுக்கும். இருப்பினும், இந்த மசோதா உடனடியாக சட்டமாகாது. அடுத்து மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும். அதன் பின்னரே இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வரும். இதனால் இந்த மசோதா நடைமுறைக்கு வரவே சில ஆண்டுகள் ஆகிவிடும்.

இதற்கிடையே இந்த மசோதா புதன்கிழமை லோக்சபாவில் தாக்கலானது. விவாதத்தைத் தொடர்ந்து இந்த மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. அப்போது 454 எம்பிக்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேநேரம் இரண்டு எம்.பிக்கள் மட்டுமே இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். அதாவது மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் அவரது மற்றொரு எம்பியுமான இம்தியாஸ் ஜலீலும் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்.

எதிராக எத்தனை பேர்: இந்த மசோதா இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி ஓவைசி எதிராக வாக்களித்தார். இருப்பினும் 3இல் இரண்டு பங்கு எம்பிக்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தால் இந்த மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை இந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கலானது. ராஜ்யசபாவில் பல மணி நேரம் இது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இறுதியாகப் பேசிய பிரதமர் மோடி, இந்த மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றும்படி கோரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து இந்த மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. லோக்சபாவில் இந்த மசோதாவுக்கு எதிராக இருவர் வாக்களித்த நிலையில், ராஜய்சபாவில் யாருமே இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. அவையில் இருந்த அத்தனை பேரும் இதற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். 215 பேர் அவையில் இருந்த நிலையில், அனைவருமே இதற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இந்த மசோதா பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பொதுமக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதையடுத்து இது குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+