மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து.. இ-பாஸ் தேவையில்லை.. ஆனால்.. மத்திய அரசு சொல்வது என்ன?
டெல்லி: மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அனுமதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, ஆனால் இதில் மாநில அரசுகள் சொந்தமாக முடிவை எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜுன் 30 வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் தளர்வுகள் கொண்டாட வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தளர்வில் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்களுக்கு இடையே மக்கள் செல்ல எந்த விதமான தடையும் கிடையாது. இதற்கு இ- பாஸ் அல்லது வேறு விதமான அனுமதிகளை பெற வேண்டிய அவசியம் கிடையாது.
ஆனால், மாநில அரசுகள் இதில் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவும் நிலையை வைத்து, மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்து மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம். மாநிலங்களுக்கு இடையில் மக்கள் பயணம் செய்வது தொடர்பான வழிமுறைகளை அந்த மாநில அரசுகளே வெளியிடலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
இன்னொரு பக்கம் மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை. சரக்கு வாகனங்களை இயக்க மாநில அரசுகள் தடை விதிக்க முடியாது. இது எப்போதும் போல மாநிலங்களுக்கு இடையே தொடரும்.
சர்வதேச விமான சேவை தொடங்காது. சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும். பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications