வென்றாலும் பாஜகவுக்கு உறுத்தலைக் கொடுக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி.. 10% வாக்குகள் அதிகரிப்பு!
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 255 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்திருந்தாலும் சமாஜ்வாதி கட்சியின் வாக்கு சதவீதம் சுமார் 10% அதிகரித்திருப்பது அக்கட்சிக்கு ஆகப் பெரும் சவாலாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
5 மாநில சட்டசபை தேர்தல்களில் உ.பி.யில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தமது வாக்கு சதவீதத்தை மிக அதிகமாக உயர்த்தி காட்டியிருக்கிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு சதவீதம் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

பாஜக, சமாஜ்வாதி
உத்தரப்பிரதேசத்தில் 2017-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவின் வாக்கு சதவீதம் 2% உயர்ந்துள்ளது. 2017-ல் பாஜகவின் வாக்கு சதவீதம் 39.7% ஆக இருந்தது. தற்போது 41.6% ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் 2017-ல் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் வாக்கு சதவீதம் 21.8% ஆக இரருந்தது. தற்போது சமாஜ்வாதி கட்சியின் வாக்கு சதவீதம் 31.2% ஆக உயர்ந்துள்ளது.

காங். படுமோசம்
உ.பியில் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வாக்கு சதவீதம் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளன. 2017-ல் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு சதவீதம் 22.2% ஆக இருந்தது. தற்போதைய தேர்தலில் இது 12.7% ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 6.3% வாக்குகளைப் பெற்றிருந்தது. இம்முறை அதைவிட படுமோசமாக வெறும் 2.4% வாக்குகளைத்தான் காங்கிரஸ் கட்சியால் பெற முடிந்துள்ளது. உ.பி.யில் மிக சிறிய கட்சியான ராஷ்டிரிய லோக் தள் கட்சியின் வாக்கு சதவீதம் 3% என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி இருமடங்கு மெர்சல்
பஞ்சாப் மாநிலத்தில் 2017-ல் ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு சதவீதம் 23.7% ஆக இருந்தது. இது தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய வாக்கு சதவீதம் 42% ஆக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 38.5% த்தில் இருந்து 23% ஆக சரிந்துள்ளது. சீக்கியர்களின் கட்சியான சிரோமணி அகாலி தளம் தமது செல்வாக்கை படிப்படியாக இழந்து வருகிறது. அகாலிதளத்தின் வாக்கு சதவீதம் 25.2%-ல் இருந்து 18.4% ஆக குறைந்துள்ளது.

உத்தரகாண்ட் காங். அதிகரிப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. அதேநேரத்தில் காங்கிரஸின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2017 சட்டசபை தேர்தலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸின் வாக்கு சதவீதம் 33.5%. இது தற்போது 37.9% ஆக உயர்ந்துள்ளது. 2017-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவின் வாக்கு சதவீதம் சரிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரகாண்ட்டில் ஆளும் பாஜகவின் வாக்கு சதவீதம் 46.5% -ல் இருந்து 44.3% ஆக குறைந்திருக்கிறது.

கோவா கட்சிகள் வாக்கு சதவீதம்
கோவா மாநிலத்தில் தனிப்பெரும்பான்மை கட்சியாக பாஜக அதிக இடங்களைப் பெற்றுள்ளது. இம்மாநிலத்தில் பாஜகவின் வாக்கு சதவீதமானது 32.5%-ல் இருந்து 33.3% ஆக சற்று அதிகரித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் கணிசமாக சரிவை எதிர்கொண்டிருக்கிறது. காங்கிரஸின் வாக்கு சதவீதமானது 28.4%-ல் இருந்து 23.5% ஆக குறைந்துள்ளது.

மணிப்பூர் காங். படுவீழ்ச்சி
மணிப்பூரில் விஸ்வரூப வெற்றியைப் பெற்றிருக்கும் பாஜகவின் வாக்கு சதவீதம் 36.3%-ல் இருந்து 37.7% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் வாக்கு சதவீதம் படுமோசமாக குறைந்துள்ளது. 2017 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 35.1% வாக்குகளைப் பெற்றிருந்தது. இம்முறை 16.6% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சியின் வாக்கு சதவீதம் 17.1%. அந்த கட்சியைவிட காங்கிரஸின் வாக்கு சதவீதம் குறைந்து போயுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications