உ.பி. எல்லையில் ராகுல், பிரியங்கா திடீரென தடுத்து நிறுத்தம்- பொதுமக்கள் திரண்டதால் பதற்றம்!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் வன்முறைகள் நிகழ்ந்த பகுதிகளைப் பார்வையிட லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பயணித்த வாகனத்தை உத்தரப்பிரதேச போலீசார் டெல்லி- மீரட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காஸிப்பூர் பகுதியில் தடுத்து நிறுத்தினர். ஒரு மணிநேரத்துக்கும் மேலாக உ.பி. எல்லையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் அங்கு பொதுமக்கள் பெருந்திரளாக ஒன்று கூடியதால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது சில நாட்களுக்கு பின்னர் அனுமதி அளிக்கப்படும் என போலீசார் வாக்குறுதி அளித்ததால் ராகுல், பிரியங்கா காந்தி டெல்லி திரும்பினர்.
உத்தரப்பிரதேசம் சம்பல் பகுதியில் மசூதி ஒன்று, கோவிலை இடித்துதான் கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் மசூதியை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

இதனை ஏற்ற நீதிமன்றம், சம்பல் மசூதியில் ஆய்வு நடத்த அனுமதித்தது. இதனடிப்படையில் நவம்பர் 19-ந் தேதி முதல் கட்ட ஆய்வு அமைதியாக நடைபெற்றது. ஆனால் இதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த மசூதியில் ஆய்வு நடத்த அதிகாரிகள் சென்ற போது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. அப்போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சிலர் மரணமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதலுக்கு சமாஜ்வாதி கட்சியினரே காரணம் என கூறி போலீசார் 800க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பல் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உ.பி. சம்பல் பகுதியில் ஆய்வு நடத்துவதற்காக செல்வதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அறிவித்திருந்தனர். ஆனால் ராகுல், பிரியங்கா காந்திக்கு உ.பி. போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
இருப்பினும் தடையை மீறி உ.பி. சம்பல் நோக்கி இன்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சென்றனர். இருவரும் பயணித்த வாகனம் டெல்லி- மீரட் சாலையில் உ.பி. எல்லையான காஸிப்பூர் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக அதே இடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெருந்திரளான பொதுமக்கல் ஒன்று திரண்டனர். அங்கு திரண்ட மக்களிடையே பிரியங்காவும் ராகுல் காந்தியும் உரையாற்றினர். அப்போது பேசிய பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர், அவருக்கான அரசியலமைப்பு உரிமைகள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை. அவரைத் தடுக்க முடியாது. உத்திரபிரதேச போலீசாருடன் நான் தனியாக செல்வேன் என்று ராகுல் காந்தி கூறினார். ஆனால் அதற்கும் போலீசார் தயாராக இல்லை. இந்தக் கேள்விகளுக்கு போலீஸாரிடம் பதில் இல்லை. உ.பி.யில் இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கை சிறப்பாகக் கையாண்டதாக பா.ஜ.க ஏன் பெருமையுடன் சொல்கிறது? என கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி பேசுகையில், நாங்கள் சம்பாலுக்கு செல்ல முயற்சிக்கிறோம், போலீசார் அனுமதி மறுக்கிறார்கள். அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அங்கு செல்வது எனது உரிமை, ஆனால் அவர்கள் என்னைத் தடுக்கிறார்கள். நான் தனியாக செல்லத் தயார், நான் போலீசார்டனும் செல்லத் தயார். ஆனால், அவர்கள் அதையும் ஏற்கவில்லை,
இது எதிர்க்கட்சித் தலைவரின் உரிமைகளுக்கு எதிரானது, நாங்கள் சம்பாலுக்குச் செல்ல விரும்புகிறோம். அங்கு என்ன நடந்தது என்று பார்க்க விரும்புகிறோம். நாங்கள் மக்களை சந்திக்க விரும்புகிறோம், நமது அரசியலமைப்பு உரிமை மறுக்கப்படுகிறது. இதுவே புதிய இந்தியா... இதுவே அம்பேத்கரின் அரசியலமைப்பை முடிவுக்கு கொண்டுவரும் இந்தியா. நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அடுத்த சில நாட்களில் சம்பல் பகுதிக்கு அனுமதிக்கப்படுவர் என போலீஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் டெல்லி திரும்பினர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications