ஆண் நண்பனுடன் அந்த கோலம்.. பார்த்த கணவனை கிரைண்டரில் அறைத்த மனைவி
டெல்லி: காதலனோடு முறையற்ற உறவில் இருந்ததை பார்த்து விட்டதால், ஆண் நண்பர்களோடு சேர்ந்து கணவனை காலி செய்து, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக கிரைண்டரில் போட்டு அறைத்த உபியை சேர்ந்த ரூபி என்ற பெண் மற்றும் அவரது ஆண் நண்பர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இது பற்றி முழுமையாக பார்ப்போம்.
இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் நடைபெற்றுள்ளது.
சம்பவத்தின் பின்னணி பற்றி பார்ப்போம்.

கொல்லப்பட்ட நபரின் பெயர் அக்ஷய். இவரது மனைவி ரூபி. இவர்கள் இருவரும் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வந்தனர். ரூபிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
கொலைக்கான காரணம்
முதலில் எதுவும் தெரியவில்லை. அரசல் புரசலாக கிராமத்தில் பேச தொடங்கி உள்ளனர். இதையடுத்து ரூபியின் முறையற்ற உறவு குறித்து ஒரு நாள் நேரில் பார்த்ததால் அவரது கணவர் அக்ஷய்க்கும் ஒரு கட்டத்தில் தெரியவந்துள்ளது.
இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாம்.
தங்களது உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்ட ரூபி தனது காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.
நடந்தது என்ன?
போலீஸ் விசாரணையின்படி, ரூபி தனது காதலன் மற்றும் சில நண்பர்களின் உதவியுடன் அக்ஷயைக் கொலை செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காகவும், உடல் பாகங்களை எளிதாக அப்புறப்படுத்துவதற்காகவும் அக்ஷயின் உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். பின்னர் உடலின் சில பாகங்களைச் சிதைக்க கிரைண்டர் அல்லது மிக்ஸியைப் பயன்படுத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. பின்னர் அந்த உடல் பாகங்களைச் சிறு சிறு பொட்டலங்களாகக் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர்.
எப்படி சிக்கினார்
அக்ஷய் காணாமல் போனது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். ரூபியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். தற்போது ரூபி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த காதலன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications