Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோட்டை விடும் அமெரிக்கா..கவுதம் அதானி மீதான குற்றச்சாட்டால் சீனாவுக்கு என்ன லாபம்? முழு விபரம் இதோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டின் பெரும் கோடீஸ்வரராக உள்ள கவுதம் அதானி மீது லஞ்ச புகார் தொடர்பாக அமெரிக்கா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்கா மறைமுகமாக சீனாவுக்கு சப்போர்ட் செய்கிறதா? அதோடுஉலக நாடுகளில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்துக்கு தடுக்காமல் அமெரிக்கா கோட்டை விடுகிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளதோடு, அதன் பின்னணி பற்றி இங்கே பார்க்கலாம்.

சில ஆண்டுகளாக அமெரிக்காவில் சில அரசியல் கட்சி தலைவர்கள் புவிசார் அரசியல் பற்றிய அறியாமையில் கருத்து தெரிவிப்பதை பேஷனாக்கி வருகின்றனர். ஒருபுறம் பிற நாடுகளை தனிமைப்படுத்தி நாட்டு நலனே முக்கியம் என்று பேசி வரும் அவர்கள் மற்றொரு புறம் ஈராக் போர், வியட்நாம் போர் உள்ளிட்டவற்றில் அமெரிக்கா மூக்கை நுழைக்கின்றனர்.

gautam adani adani us

இது அமெரிக்கர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை அவர்களால் சகித்து கொள்ள முடியவில்லை. இப்போது அமெரிக்காவை போல் ரஷ்யா,சீனாவும் வல்லரசு நாடுகளாக உள்ளன.

இதில் வல்லரசு நாடான ரஷ்யா, இழந்த சோவியத் யூனியனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் இன்னொரு வல்லரசான சீனா, அமெரிக்காவின் செல்வாக்கை குறைத்து அந்த இடத்தில் அமர தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பல நாடுகளுக்கு சீனா உதவி செய்து வருகிறது. ரஷ்யா, சீனா ஆகியவை தங்களின் நிர்வாக முறையே சிறந்தது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

இது அமெரிக்காவுக்கும் பிரச்சனையாகும். ஆனால் அதனை கண்டுக்கொள்ளாமல் அமெரிக்கா உள்ளது. அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடன் இருநாடுகளின் செயல்பாட்டையும் தடுத்து நிறுத்தவில்லை. சீனா உலக நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுப்படுத்தும் வகையில் பிஆர்ஐ எனும் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இது 150 நாடுகளை இணைக்கும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் 60 சதவீத மக்கள்தொகையை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு மத்திய கிழக்கு, தெற்காசியா உள்ளிட்டவற்றின் வணிகத்துக்கு இந்த திட்டம் முக்கிய பங்காற்ற உள்ளது.

அதுமட்டுமின்றி அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பாகிஸ்தான், ஈரானுடன், சீனா நெருக்கமாக செயல்படுகிறது. இந்த நடவடிக்கை என்பது இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவுக்கும் புவிசார் அரசியலில் சிக்கலை ஏற்படுத்துகிறது. சீனாவின் இந்த ஆதிக்கத்தை அடக்க வேண்டும் என்பதற்காக இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமி்ரேட்ஸ், சவூதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து கடந்த 2023ம் ஆண்டில் IMEC எனும் இந்தியா - மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழிதட திட்டத்தை கையில் எடுத்தது. இது பிராந்திய பாதுகாப்பு மற்றம் பொருளாதார வளர்ச்சியை வளர்க்கும் ஆபிரகாம் ஒப்பந்தங்களை ஒருங்கிணைக்கிறது. இது சீனாவின் பிஆர்ஐ வழித்தடத்துக்கு போட்டியாக அமையும்.

இப்படியான சூழலில் தான் கடந்த ஆண்டு அமெரிக்காவில் அதானி குழுமம் மீது லஞ்ச புகார் முன்வைக்கப்பட்டது. அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு எதிராகவும், அமெரிக்காவின் நலனுக்கு எதிரானதாகவும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் பார்க்கின்றனர். அதாவது அமெரிக்காவின் இந்த செயல் என்பது இந்தியா - அமெரிக்கா மட்டுமின்றி சீனாவுக்கு எதிராக மேற்கொள்ளும் திட்டங்களையும் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அதானி இந்தியாவில் பல்வேறு உள்கட்டமைப்புகளை மே்ற்கொண்டு வருகிறார். இஸ்ரேலில் ஹைஃபா துறைமுகத்தை நிர்வகித்து வருகிறார்.

மேலும் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நேரம் என்பது இங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பெரிய பெரிய நிறுவனங்கள் மீதான முறைகேடுகளை எதிர்த்து போராடுவதும், அதற்கு எதிராக குரல் கொடுப்பது முக்கியம் தான். ஆனால் அமெரிக்காவுக்கு வெளியே நடந்தததாக கூறப்படும் ஒரு விஷயத்தில் அதிபர் தேர்தலுக்கு சில நாட்கள் இருந்தபோது அந்த நாடு அதானி குழுமத்தின் மீது குற்றம்சாட்டி குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளது என்பது தான் இங்கே பலருக்கும் சந்தேகத்தை கிளப்புகிறது.

மேலும் இந்த வழக்கில் சில சட்ட சிக்கல்கள் வரலாம்.இது வழக்கை எளிதில் முடிக்காமல் இழுத்து கொண்டே செல்லும். இது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் சீனாவுக்கு எதிராக துறைமுக தொழிலில் உள்கட்டமைப்புகளை மேற்கொண்டு வரும் அதானி குழும முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை குறைக்கலாம். இது இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்பொருளாதார நிலையற்ற தன்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் ஆபிரகாம் ஒப்பந்த்தின் மூலம் அமைதி மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிக்கு இது சிக்கலை தரும். அதோடு வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க முட்டுக்கட்டையாக அமையும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

இதனால் அமெரிக்கா தனது மதிப்பை உலகளவில் குறைத்து கொள்கிறது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட அமெரிக்காவின் போட்டி நாடுகள் தொடர்ந்து தங்களின் நிர்வாகம் மூலம் தங்களின் நோக்கத்தை அடைய செயல்படும் சூழலில் அமெரிக்கா திசை மாறி செல்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கொள்கையால் இருநாடுகளின் ஆதிக்கம் உலகளவில் சரிந்து வரும் சூழலில் சீனா தனது பொருளாதார வழித்தடம் மூலமாக பிற நாடுகளுடன் இணக்கமாக செல்ல துடித்து வருகிறது.

உண்மையிலேயே சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை எதிர்க்க அமெரிக்க இலக்கு வைக்கும்போது அது புவிசார் அரசியலை மையப்படுத்தி செயல்பட வேண்டும். IMEC திட்டம் என்பது இந்தியா முதல் ஐரோப்பா வரையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும், நாடுகள் இடையே நிலையான உறவை வளர்ப்பதிலும் பெரும் பங்கு வகிக்கும் அரிய திட்டமாகும். இப்படியான சூழலில் குறுகிய கால அரசியல் லாபம் மற்றும் சட்ட சூழ்ச்சிகளுக்காக அமெரிக்கா சில விஷயங்களை செய்வது என்பது அந்த நாட்டுக்கும் மட்டுமின்றி அமெரிக்காவுடன் சேர்ந்து சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க நினைக்கும் பிற நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+