ஐடி விதியை மீறி.. ட்விட்டர் இந்தியாவின் குறைதீர்ப்பு அதிகாரியாக அமெரிக்கர் நியமனம்.. தொடர் மோதல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ட்விட்டர் இந்தியாவின் தற்காலிக குறைதீர்ப்பு அதிகாரி பதவி விலகியதை அடுத்து கலிபோர்னியாவை சேர்ந்த ஜெர்மி கேசல் ட்விட்டர் இந்தியாவின் புதிய குறைதீர்ப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் மத்திய தகவல்கள் தொழில்நுட்ப துறை மூலம் சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் புதிய ஐடி விதிகள் கொண்டு வரப்பட்டன. அதன்படி இந்த சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடி தளங்கள் தங்களிடம் வரும் புகார்களை விசாரிப்பதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.

இந்தியாவில் இருக்கும் அனைத்து பெரிய சமூக வலைதளங்களுக்கும் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். இவர் கண்டிப்பாக இந்தியாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

 நீக்கம்

நீக்கம்

அரசு வைக்கும் புகார்களை இந்த அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். ஏதாவது போஸ்ட்களை நீக்க வேண்டும் என்றால் இவர்கள்தான் நீக்க வேண்டும். ட்விட்டர் நிறுவனம் இந்த விதிகளை மதிக்காத நிலையில், இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியை மட்டும் நியமனம் செய்து இருந்தது. நிரந்தர அதிகாரியை நியமிக்காமல் இடைக்கால அதிகாரியாக தர்மேந்திரா சாத்தூர் நியமிக்கப்பட்டார்.

தர்மேந்திரா சாத்தூர்

தர்மேந்திரா சாத்தூர்

தர்மேந்திரா சாத்தூர் இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தாலும், இவரின் நியமனம் நிரந்தரம் இல்லை என்பதால் மத்திய அரசுக்கும் டிவிட்டர் நிறுவனத்திற்கும் தொடர்ந்து மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில் கலிபோர்னியாவை சேர்ந்த ஜெர்மி கேசல் ட்விட்டர் இந்தியாவின் புதிய குறைதீர்ப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியர்

இந்தியர்

ஐடி விதிப்படி இந்தியர் ஒருவரைத்தான் இந்த பொறுப்பில் நியமிக்க வேண்டும். ஆனால் கலிபோர்னியாவை சேர்ந்த ஜெர்மி கேசல் ட்விட்டர் நிறுவனம் நியமனம் செய்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் சர்வதேச சட்ட கொள்கை இயக்குனர்தான் ஜெர்மி கேசல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொறுப்பிற்கு வெளிநாட்டு நபரை ட்விட்டர் நியமனம் செய்தது சர்ச்சையாகி உள்ளது.

சர்ச்சை

சர்ச்சை

ட்விட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையில் கடும் மோதல் நிலவி வருகிறது. உத்தர பிரதேசத்தில் பாஜக அரசு மூலம் ட்விட்டர் மீது பதியப்பட்ட வழக்கு, பாராளுமன்ற நிலைக்குழுவின் விசாரணை என்று தொடர் மோதல் நிகழ்ந்தது. இரண்டு நாட்கள் முன் மத்திய ஐடி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கை காப்பிரைட் காரணமாக ட்விட்டர் நிறுவனம் நேற்று ஒரு மணி நேரம் முடக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+