இந்தியாவுக்கான வரியை 18% ஆக குறைத்த டிரம்ப்.. எப்படி சாத்தியமானது? அமெரிக்க தூதர் சொன்ன தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரிகளை விதித்தார். இது நம் நாட்டின் ஏற்றுமதியை பாதித்தது. இந்நிலையில் தான் தற்போது அமெரிக்காவுக்கும், நம் நாட்டுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி நம் நாட்டுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு சாத்தியமானது எப்படி? என்பது பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறையை சுட்டிக்காட்டி 25 சதவீதமும், அதன்பிறகு ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 25 சதவீதம் என்று 50 சதவீத வரியை விதித்தார்.

tariffs donald trump india

இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பெரிதும் தடைபட்டது. வர்த்தகர்கள் அதிகளவில் பாதிப்பை எதிர்கொண்டனர். மேலும் நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பிரச்சனை வெடித்தது.

18 சதவீதமாக குறைப்பு

இதையடுத்து பிரச்சனையை தீர்க்க இருதரப்பும் பேச்சுவார்த்தையை தொடங்கியது. பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் தான் நேற்றைய தினம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசிய நிலையில் இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் உறுதியானது.

இன்னும் 25% ரத்தாக வாய்ப்பு

இதன்மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 25 சதவீத வர்த்தக வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார். அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் நம் நாட்டுக்கு கூடுதலாக அபராத வரியாக விதிக்கப்பட்ட 25 சதவீதத்தையும் நீக்க அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை உறுதியளித்துள்ளது.

நம்நாடு வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறிய நிலையில் இந்த வரியும் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் நம் நாட்டின் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி 18 சதவீதமாக சரிய உள்ளது.

உறுதி செய்த அமெரிக்க தூதர்

இதனை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் செர்ஜியோ கோர் உறுதி செய்துள்ளார். இழுபறி நீடித்த திடீரென்று இருநாடுகள் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது பற்றி அவர் விளக்கி உள்ளார். இதுபற்றி அவர், ‛‛இந்த வெற்றிக்கு அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் தான் காரணம். இரு தலைவர்களுக்கும் இடையே தனிப்பட்ட நட்பு தான் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய உதவியது. இறுதியாக இந்தியாவுக்கான வரி விதிப்பு 18 சதவீதம் என்று அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.

இன்னும் பல ஒப்பந்தங்கள்

இந்த அறிவிப்பு என்பது நம்ப முடியாத செய்தியாகவும், அதேவேளையில் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவும் இருக்கும்.பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இக்காலக்கட்டத்தில் அமைதியைக் கொண்டு வர மிகவும் அக்கறை கொண்டுள்ளனர். அதனால்தான் இறுதியாக 18 சதவீதம் என்ற வரி விகிதம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இனியும் நம்பமுடியாத வகையிலான ஒப்பந்தங்கள் வரவுள்ளன. இன்னும் பல சிறந்த ஒப்பந்தங்கள் வர உள்ளது'' என்றார்.

டிரம்ப் சொன்னது என்ன?

முன்னதாக இந்த வரி குறைப்பு பற்றி டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதில், ‛‛பிரதமர் மோடி உடனான நட்பு மற்றும் மரியாதையின் காரணமாக அவரது கோரிக்கையை அமெரிக்கா ஏற்றது. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு உடனடியாக ஒப்புக்கொண்டோம். இதன் மூலம் அமெரிக்கா தற்போதுள்ள 25 சதவீத பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைக்கும்.

அதேபோல் இந்தியாவும், அமெரிக்கா பொருட்கள் மீதான வரியை பூஜ்ஜியமாக குறைக்க முன்வரும். அதுமட்டுமின்றி எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்பட பல துறைகளில் பிரதமர் மோடி, 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருட்களை அமெரிக்காவில் இருந்து வாங்குவதாக உறுதியளித்துள்ளார்'' என்று கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+