உலகின் பணக்கார, வல்லரசு நாடுகளை எல்லாம்.. இந்தியாவிற்கு எதிராக திரட்டும் டிரம்ப்.. என்னமோ நடக்குது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவிற்கு எதிராக உலகின் வல்லரசு நாடுகளை, வலிமையான பொருளாதார நாடுகளை இந்தியாவிற்கு எதிராக கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வர்த்தகம் குறித்து இந்தியாவுக்குத் தொடர்ந்து மாறுபட்ட சிக்னல்களை அளித்து வருகிறார். ஒருபுறம் பிரதமர் நரேந்திர மோடியுடன் நட்பு மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசுகிறார். மறுபுறம், இந்திய மற்றும் சீனப் பொருட்கள் மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்துகிறார். டிரம்பின் இந்த அணுகுமுறை இந்தியாவுக்குக் குழப்பத்தையும், அபாயத்தையும் உருவாக்குகிறது.

Donald Trump India

ஏற்கனவே, இந்திய இறக்குமதிப் பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா 50% ஆக இருமடங்காக உயர்த்தியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து மலிவான எண்ணெய் வாங்கியதற்கான தண்டனையாக இது பார்க்கப்பட்டது. இப்போது, ஐரோப்பாவும் இதே பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது நிலையான வர்த்தகக் கொள்கையாக இல்லாமல், திடீர் அதிர்ச்சியாகவே உள்ளது.

மசாலா ஒப்பந்தம்

இந்தியாவை சமாளிக்கும் விதமாக, அதே சமயம் இந்தியாவிரு எதுவும் பலன் அளிக்காத மசாலா ஒப்பந்தத்தை டிரம்ப் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கைகளை விடுக்கப்படுகின்றன. இது போன்ற "மசாலா ஒப்பந்தங்களுக்கு" இந்தியா பலியாகிவிடக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். "மசாலா" என்பது, "அழுத்தம் மூலம் எட்டப்பட்ட பரஸ்பர உடன்பாட்டு ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படும்.. அதாவது Mutually Agreed Settlements Achieved through Leveraged Arm-twisting" என்பதைக் குறிக்கிறது.

இந்தியாவிற்கு கடுமையான பிரஷர் கொடுத்து அதன் மூலம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வது. இவை படங்களுக்கு மட்டுமே சிறந்ததாகத் தோன்றும் கவர்ச்சிகரமான, குறுகிய கால சமரசங்கள் கொண்டதாக இந்த ஒப்பந்தம் இருக்கும். ஆனால் இது போன்ற ஒப்பந்தங்கள் நீண்ட காலத்திற்கு ஏற்றுமதியாளர்களைப் பாதுகாப்பதில்லை. மசாலா ஒப்பந்தங்கள் தற்காலிக தீர்வுகளை மட்டுமே தரும். இந்தியாவுக்கு தற்காலிகத் தீர்வுகள் அல்ல, தெளிவான மற்றும் நிரந்தர ஒப்பந்தங்கள் தேவை.

உலக நாடுகளை திரட்ட முடிவு

இந்த நிலையில்தான் இந்தியாவிற்கு எதிராக உலகின் வல்லரசு நாடுகளை, வலிமையான பொருளாதார நாடுகளை இந்தியாவிற்கு எதிராக கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம், ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் இந்தியா மற்றும் சீனா மீது கடுமையான கட்டணங்களை விதிக்க ஜி7 நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளது. உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மாஸ்கோவை கட்டாயப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவிற்கு எதிராக பரிந்துரைக்கப்பட்ட அபத்தங்கள் 50 முதல் 100 சதவீதம் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஜி7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் இன்று காணொளி அழைப்பு மூலம் இந்த முன்மொழிவை விவாதிக்கவுள்ளனர்.

இந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியம் இதேபோன்ற கட்டணங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று அதிபர் டிரம்ப் விடுத்த முந்தைய வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த புதிய நடவடிக்கை வந்துள்ளது.

டிரம்ப் ஐரோப்பாவிற்கு அழுத்தம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீது அழுத்தம் கொடுக்கும் உத்தியின் ஒரு பகுதியாக, சீனா மற்றும் இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறாராம். கடந்த 4 நாட்களுக்கு முன்பே டிரம்ப் இதற்கான கோரிக்கையை வைத்த நிலையில் டிரம்ப் மீண்டும் ஐரோப்பாவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளாராம்.

ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.

அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50% இறக்குமதி வரிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரின் வெற்றி மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கருத்தரங்கில் பேசிய ஸு, "அமெரிக்கா நீண்ட காலமாக சுதந்திர வர்த்தகத்தால் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது அது அதிக விலைகளைக் கோருவதற்கு வரிகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. இந்தியாவின் மீது 50% வரி விதிப்பது நியாயமற்றது, மோசனது, அதை சீனா உறுதியாக எதிர்க்கிறது," என்று குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+