உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 20 கோடியை கடந்தது- அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது
டெல்லி: உலக நாடுகளில் ஒருநாள் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,02,970 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 56,59,102. இந்தோனேசியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1598 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
கொரோனா 2-வது அலை உலக அளவில் இந்தியாவில்தான் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கொரோனா 2-வது அலை பாதிப்பு இந்தியாவில் சற்று கணிசமாக குறைந்திருக்கிறது.

ஆனால் உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,02,24,385. உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 42,58,245. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 18,04,96,792.
அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதம் அதி உச்ச பாதிப்பு இருந்தது. தற்போது அதே நிலையை எதிர்கொண்டிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,02,970. இங்கு கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 506. கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 56,59,102. அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியாவில் அதிக பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் செவ்வாய்க்கிழமையன்று மொத்தம் 42,566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்தியாவில் கொரோனாவால் நேற்று மட்டும் 561 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 4,16,828.
இந்தியாவில் திங்கள்கிழமையன்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,04,958 ஆக இருந்தது. இந்தியாவில் திங்கள்கிழமையன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,549 ஆக இருந்தது.
நாடுகளில் ஒருநாள் பாதிப்பு விவரம்: ஈரான் 39,019; இந்தோனேசியா 33,900; பிரேசில் 32,572; பிரான்ஸ் 26,829; துருக்கி 24,832; ரஷ்யா 22,010; இங்கிலாந்து 21,691; ஸ்பெயின் 20,327.
உலக நாடுகளில் இந்தோனேசியாவில்தான் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை விவரம்: இந்தோனேசியா 1,598; பிரேசில் 1,238; ரஷ்யா 788; இந்தியா 561; தென்னாப்பிரிக்கா 555; அமெரிக்கா 514.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்து உள்ளது. இங்கிலாந்தில் 12,41,308 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் விவரம்: ஸ்பெயின் 689,312; பிரேசில் 680,611; இந்தோனேசியா 524,142; ரஷ்யா 513,524; ஈரான் 463,292.
இந்தியாவைப் பொறுத்தவரையில் கேரளாவில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கேரளாவில் 23,676 பேருக்கு செவ்வாய்க்கிழமையன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் 6,005 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
மகாராஷ்டிராவில் 177 பேரும் கேரளாவில் 148 பேரும் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். கர்நாடகா, தமிழகம், ஆந்திராவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 1,000-த்தை தாண்டியதாக உள்ளது. தமிழகத்தில் நேற்று 1908 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.,
இந்தியாவில் இதுவரை மொத்தம் 47,52,49,554 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் தற்போதைய நிலையில் சுமார் 2.75 கோடி (2,75,88,573) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications