Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப் சொல்வதை கேட்க முடியாது.. இந்தியா அதிரடி முடிவு.. தாராளம் காட்டும் ரஷ்யா.. அலறும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதில் 25 சதவீத வரி என்பது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்டது. ஆனாலும் நம் நாடு அச்சமடையவில்லை. தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை சலுகை விலையில் வாங்கி வருகிறது. இந்நிலையில் தான் டிரம்ப் அடாவடிதனத்தை மதிக்காமல் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கூடுதல் கச்சா எண்ணெயை வாங்கி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி கடந்த மாதம் 7 ம்தேதி முதற்கட்டமாக 25 சதவீத வரியை விதித்தார். அதன்பிறகு உக்ரைன் போர் புரியும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது.

us-tariffs-amid-of-donald-trump-tariff-row-india-wants-to-buy-more-crude-oil-from-russia-with-disco

இதன்மூலம் உக்ரைன் மீது போர் புரிய ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாக இந்தியா உதவுகிறது எனக்கூறி 2வது கட்டமாக கடந்த 27 ம்தேதி 25 சதவீத வரியை விதித்தார். இதனால் நம் நாட்டுக்கு டிரம்ப் விதித்த 50 சதவீத வரி அமலில் உள்ளது. இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்

டிரம்பின் வரி விதிப்புக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது நியாயமற்ற வரி. இருப்பினும் நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்தியா செயல்படும் என்று அறிவித்தது. இதன்மூலமாக ரஷ்யாவிடம் இருந்து கிடைக்கும் சலுகை விலை கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்குவோம். டிரம்பின் வரிக்கு பயந்து நிறுத்தமாட்டோம் என்பதை நம் நாடு அமெரிக்காவுக்கு உணர்த்தியது.

இந்நிலையில் தான் கடந்த 27 ம் தேதி 2ம் கட்டமாக நம் நாட்டுக்கு அமெரிக்கா 25 சதவீத விதித்த நிலையில் அன்று முதல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது அதிகரித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 27 ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து 11.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை வாங்கி உள்ளது.

ப்ளூம்பெர்க் அறிக்கை

இதுதொடர்பாக ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛அமெரிக்காவின் 50 சதவீத வரி அமலுக்கு வந்த ஆகஸ்ட் 27 ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை இந்தியாவின் அரசு மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து 11.4 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை வாங்கி உள்ளன.

டிரம்பின் வரி மிரட்டல் காரணமாக ஆகஸ்ட் தொடக்கத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது கொஞ்சமாக சரிந்தது. ஆனால் தற்போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்துள்ளது.

அதிகரிக்க இந்தியா முடிவு

ரஷ்யா தொடர்ந்து இந்தியாவக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெயை வழங்கி வருகிறது. இது ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவை தூண்டுகிறது. இதனால் வரும் மாதங்களில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் செல்லலாம்.

அதன்படி ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் இந்தியா 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அல்லது ஒரு நாளைக்கு சுமார் 1,50,000 முதல் 3,00,000 பேரல்கள் வரை கூடுதலாக ரஷ்யாவிடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் பேச்சை கேட்காத இந்தியா

அமெரிக்காவின் வரியால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று டிரம்ப் நினைத்தார். ஆனால் நம் நாடு டிரம்பை மதிக்காமல் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை சலுகை விலையில் பெற்று வருகிறது. இதன்மூலம் டிரம்பின் மூக்கை இந்தியா வெட்டியுள்ளது.

மேலும் ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் நம் நாடு கச்சா எண்ணெய் வாங்குவதால் பெரிய லாபம் கிடைத்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு முதல் ரஷ்யாவிடம் அதிகளவிலான கச்சா எண்ணெயை நம் நாடு வாங்கி வருகிறது. நம் நாட்டின் தேவையில் 36 முதல் 38 சதவீத கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து தான் வருகிறது.

17 பில்லியன் டாலர் வரை மிச்சம்

உக்ரைன் போருக்கு முன்பு 1 சதவீதம் கச்சா எண்ணெயை மட்டுமே ரஷ்யாவிடம் நம் நாடு வாங்கியது. அதன்பிறகு அமெரிக்கா உள்பட பல நாடுகளின் பொருளாதார தடையால் நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 36 முதல் 38 சதவீதத்தை ரஷ்யா வழங்க தொடங்கியது. அதுவும் சலுகை விலையில் இந்த கச்சா எண்ணெய் கிடைக்கிறது. இதன்மூலம் நம் நாட்டுக்கு 17 பில்லியன் டாலர்கள் வரை மிச்சமாகி உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+