அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகுது! 10 நாளில் தீரப்போகும் ஏவுகணைகள்? பென்டகனின் திக் எச்சரிக்கை
டெல்லி: 'அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு காலியாகிறது!' - இப்படி ஒரு செய்தி பென்டகன் வட்டாரத்திலிருந்து கசிந்து, உலக நாடுகளை உறைய வைத்திருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள போர் இன்று நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்னும் 10 நாட்களுக்கு மேல் இந்த மோதல் நீடித்தால், அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைகள் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்றே மணி நேரத்தில் மாறிய உலக வரைபடம்!
கடந்த வெள்ளிக்கிழமை மதியம், ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இல்லை என முகம் சுளித்தார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அந்த அதிருப்தி வெளியான அடுத்த மூன்றே மணி நேரத்தில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் முக்கிய ராணுவத் தளபதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் மழையைப் பொழிந்து வருகிறது.
"எல்லையற்ற ஆயுதங்கள்" - ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் அதிரடி!
பென்டகன் அதிகாரிகள் மற்றும் கூட்டுப் படைத் தளபதி ஜெனரல் டான் கெய்ன் ஆகியோர், "நீண்ட காலப் போர் அமெரிக்காவின் பொருளாதாரத்தையும், ஆயுத இருப்பையும் கடுமையாகப் பாதிக்கும்" என எச்சரித்துள்ளனர். குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் உக்ரைன் நாடுகளுக்குத் தொடர்ந்து ஆயுத உதவி வழங்கி வருவதால், அமெரிக்காவின் சேமிப்பு ஏற்கனவே சரிபாதியில் இருப்பதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், வழக்கம்போல ட்ரம்ப் இதை மறுத்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில்,
"அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு வரலாற்றில் இல்லாத அளவுக்குப் பலமாக உள்ளது. எங்களிடம் எல்லையற்ற ஆயுதங்கள் உள்ளன. எங்களால் 'என்றென்றும்' (Forever) போர் புரிய முடியும்"
எனப் பதிவிட்டுள்ளார்.
நிஜ நிலவரம் என்ன? - புள்ளிவிவரப் பீதி!
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் கருத்துப்படி, ஈரான் மாதத்திற்கு 100 ஏவுகணைகளைத் தயாரிக்கிறது. ஆனால், அமெரிக்காவால் 6 முதல் 7 இன்டர்செப்டர் (Interceptor) ஏவுகணைகளை மட்டுமே ஒரு மாதத்தில் தயாரிக்க முடிகிறது.
THAAD சிஸ்டம்: கடந்த ஆண்டு மோதலின்போதே அமெரிக்கா தன்னிடம் இருந்த THAAD ஏவுகணைகளில் 25 சதவீதத்தைப் பயன்படுத்திவிட்டது.
JDAM கிட்கள்: சாதாரண குண்டுகளை 'ஸ்மார்ட்' குண்டுகளாக மாற்றும் இந்தத் தொழில்நுட்பக் கருவிகளுக்கும் இப்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரச் சுமை: ஈரானைத் தாக்கிய முதல் 24 மணி நேரத்திலேயே அமெரிக்கா செலவு செய்த தொகை சுமார் $779 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,900 கோடி!).
லட்சம் கோடிகளைக் விழுங்கும் போர்!
யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு போன்ற பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல்களைக் கடலில் நிறுத்த மட்டுமே ஒரு நாளைக்கு 58 கோடி ரூபாய் செலவாகிறது. பென் வார்டன் பட்ஜெட் மாடலின் இயக்குநர் கென்ட் ஸ்மெட்டர்ஸ் கணிப்புப்படி, இந்தப் போர் நீண்டால் அமெரிக்காவுக்கு சுமார் 210 பில்லியன் டாலர் (சுமார் 18.87 லட்சம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்படும்.
மறுபுறம், போரின் கோர முகமாக ஈரானின் ஹார்முஸ்கான் மாகாணத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டன.
வல்லரசு நாடுகளின் மோதல், வெறும் ஆயுதப் போட்டியாக மட்டுமில்லாமல், உலகப் பொருளாதாரத்தையும், அப்பாவி உயிர்களையும் பலிவாங்கும் ஒரு தீராத விளையாட்டாக மாறிவருவதுதான் தற்போதைய கசப்பான உண்மை!
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications