கும்பமேளா.. அரசியல் நெருக்கடி.. உத்தரகாண்ட் மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் ராஜினாமா! .
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி காரணமாக பாஜகவைச் சேர்ந்த முதல்வர் தீரத் சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரை சந்தித்து அளித்தார்.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் ராஜினாமா செய்திருப்பதற்கு அரசியல் நெருக்கடி காரணம் என்று கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் கடந்த மார்ச் 10 ஆம் தேதி பொறுப்பேற்றார். ஆனால் மூன்று மாதங்களிலேயே அரசியல் நெருக்கடி காரணமாக பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கவிழும் அபாயம்
திருவேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக தீரத் சிங் ராவத் உத்தரகாண்ட் முதல்வராக கடந்த மார்ச் 10ம் தேதி பதவியேற்றார். ஆனால் அவர் பதவியேற்ற பின்னர், மாநில பாஜக தலைவர்கள் தொடர்ந்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக பாஜக அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டது.

மேலிடம் உத்தரவு
இதையடுத்து பாஜக மேலிடம் கட்சி உயர்மட்டக்குழு தீரத் சிங் ராவத்தை டெல்லிக்கு அழைத்திருந்தது. கடந்த 3 நாட்களாக டெல்லியில் பல்வேறு பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். இறுதியில் அவரை ராஜினாமா செய்யுமாறு பாஜக மேலிடம் பணித்தது. இதனையடுத்து கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை தீரத் சிங் ராவத் அளித்தார்.

பாஜக எம்எல்ஏக்கள்
உத்தரகாண்ட் ஆளுநர் பேபி ராணி மௌரியாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனிடையே உத்தரகாண்ட் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை கூடி புதிய முதல்வரை தேர்வு செய்ய உள்ளார்கள். இதனிடையே ராஜினாமா செய்த தீரத் சிங் ராவத் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

கும்பமேளா
முதல்வராக கடந்த 3 மாதத்திற்கு முன்பு பொறுப்பேற்ற உடனேயே, தீரத் சிங் ராவத் கிழிந்த ஜீன்ஸ் அணிந்த பெண்கள் குறித்து பேசியதை பெரும் சர்ச்சையானது. இதேபோல் 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டது பிரிட்டன் அல்ல அமெரிக்கா என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று உச்சத்தில் கும்பமேளாவை அவர் கையாண்டதும், "ஆர்டி-பி.சி.ஆர் சோதனை தேவையில்லை" என்று அவர் பேசிய கருத்தும் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அத்துடன் பாஜக தலைவர்கள் மத்தியலும் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு பாஜக கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications