இயற்கையாக தோன்றும் ஆன்டிபாடி vs வேக்சின் ஆன்டிபாடி.. எது அதிக பாதுகாப்பை தரும்?ஆய்வில் சூப்பர் தகவல்
டெல்லி: கொரோனா பாதிப்பால் ஒருவர் உடலில் தோன்றும் ஆன்டிபாடிகளை காட்டிலும், தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் உருவாகும் ஆன்பாடிகள் அதிக காலம் ஒருவரது உடலில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் - கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது இது தான். இப்போது கொரோனா வேக்சின் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே, உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
அதேநேரம் கொரோனா வேக்சின் உற்பத்தியும் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை. இதனால் பல்வேறு நாடுகளிலும், கொரோனா வேக்சின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது

கொரோனா ஆன்டிபாடிகள்
அதேநேரம் தடுப்பூசி குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. பொதுவாக ஒருவரது உடலில் இரண்டு வகையில் ஆன்டிபாடிகள் உருவாகும். ஒன்று தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம். அதேபோல ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படு, அதிலிருந்து குணமடைந்தவர்கள் உடலில் ஆன்டிபாடிகள் உருவாகும். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி இயல்பாகவே எழும்.

எது அதிக காலம் நீடிக்கும்
இந்நிலையில், லக்னோவை சேர்ந்த கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் இது தொடர்பான தங்கள் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் கொரோனா வேக்சினால் உருவாகும் ஆன்டிபாடிகளே அதிக காலம் நீடிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களில் உடலில் உருவாகும் ஆன்டிபாடிகள் அதிகபட்சமாக மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கிறது. அதன் பிறகு தடுப்பாற்றல் குறையத் தொடங்கி விடுகிறது.

கொரோனா வேக்சின்
அதேநேரம் இரண்டு டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்ட ஒருவரது உடலில் அதிக காலத்திற்கு தடுப்பாற்றல் நீடிப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்னோ ரத்த மாற்று மருந்து துறை நடத்திய ஆய்விலும் வேக்சின் மூலம் உருவான தடுப்பாற்றல் அதிக காலம் நீடிப்பது தெரிய வருகிறது.
Recommended Video

வேக்சின் கட்டாயம்
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் இருக்கும் ஆன்டிபாடிகளும் ஒரு டோஸ் வேக்சின் எடுத்தவர்களின் உடலில் இருக்கும் ஆன்டிபாடிகளும் சமமாகவே உள்ளது. அப்போது ஒருவர் இரண்டாவது டோஸ் வேக்சின் எடுக்கும்போது, அவர்களது உடலில் இருக்கும் ஆன்டிபாடிகள் அதிகரிக்கிறது. எனவே, ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்திருந்தாலும், மருத்துவர் பரிந்துரைப்படி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா 2ஆம் அலை
மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் வேக்சின் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களில் சுமார் 80% பேருக்கு உடலில் ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளன. 2 டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்டவர்களில் சுமார் 41% கொரோனா 2ஆம் அலையிலும் பாதிக்கப்படவில்லை. 26% மட்டுமே வேக்சின் எடுத்துக் கொண்ட பிறகும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications