அள்ள அள்ள 5 சிக்ஸர்.. "வந்தே பாரத்" கலக்குதே.. நாளைக்கே "மொத்தமா" கிளம்பி வருது.. சபாஷ் பிரதமர் மோடி
டெல்லி: வந்தே பாரத் அடுத்தடுத்த சேவைகளை நீட்டித்து வரும்நிலையில், இதுகுறித்து அடுத்த அறிவிப்பையும், ரயில்வே துறை வெளியிட்டுளள்து.. இதனால், ரயில் பயணிகள் மிகுந்த குஷியாகி உள்ளனர்.
இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.
ரயில் பெட்டிகள்: வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் உள்ளதால், மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில், என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.
முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. அத்துடன், ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் உள்ளன... இவைகள் உட்பட வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க, சென்னை பெரம்பூர் லோகோ ஃபேக்ட்ரியில் தயாரிக்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்: முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளாக கண்ணாடியால் மூடப்பட்டு சுழலும் இருக்கைகள், தொடுதிரை வசதிகள், நவீன கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது பிரதமர் மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான், அவரே ஒவ்வொரு ரயிலையும் நேரில் சென்று தொடங்கி வைத்தும் வருகிறார்.. அந்தவகையில், நாளை 27-ம் தேதி, பல்வேறு மாநிலங்களில் 5 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக கோவா -மும்பை, பாட்னா -ராஞ்சி, போபால்-இந்தூர், போபால்-ஜபல்பூர், பெங்களூரு-ஹூப்ளி உள்ளிட்ட 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.. 2 ரயில்கள் மத்தியப் பிரதேசத்திலும், ஒன்று கர்நாடகாவிலும், ஒன்று பீகாரிலும், கடைசியாக மும்பை-கோவா இடையிலுமான சேவை தொடங்கப்படுகிறது.
கர்நாடகா: இதன்மூலம் இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை 23 ஆக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. கர்நாடகாவின் 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரு டூ ஹுப்ளி டூ தார்வாட் வழித்தடத்தில் இயக்கப்படுவது குறிப்பிடத்தகக்து.
அதேபோல, ஹுப்ளி-தார்வாட் இடையே சுமார் 490 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி 13 நிமிடங்களில் பயணிக்கும் என்றும், இந்த ரயில் பெங்களூருவில் இருந்து காலை 5:45 மணிக்கு புறப்பட்டு 11:58 மணிக்கு தார்வாட் ரயில் நிலையத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த புதிய ரயில்கள் சேவை துவக்கப்படும் தகவலை, ரயில்வே துறை, தன்னுடைய ட்விட்டடர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications