வந்தே பாரத்திற்கு வந்த சோதனை.. பயணிகள் மத்தியில் ஆர்வம் இல்லை..நிறுத்தப்பட்ட சேவை..எங்கு தெரியுமா?
டெல்லி: நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவையை விரிவுபடுத்த ரயில்வே திட்டமிட்டுள்ள நிலையில், பயணிகள் வருகை இல்லாத காரணத்தால் நாக்பூர்- பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிமகாக நிறுத்தப்பட்டுள்ளது. 8 பெட்டிகளாக இந்த ரயில் சேவை குறைக்கப்பட்டு இயக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் சொல்கிறார்கள்.
இந்தியா ரயில்வேயை நவீனப்படுத்தும் முயற்சிகளில் ரயில்வே துறை ஈடுபட்டு வருகிறது. ரயில் பயணிகளின் சொகுசான பயணத்தை அளிக்கும் விதமாக கடந்த 2019 ஆம் ஆண்டு வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது சென்னை - மைசூரு, சென்னை - கோவை உள்பட நாடு முழுவதும் 15 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் ரயிலில் விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளும் அதிவேகமாக செல்லக்கூடிய திறன் கொண்டவை என்பதாலும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் ஆர்வம் உள்ளது. முழுவது ஏசி, தானியங்கி கதவுகள், சுழலும் இருக்கைகள் என வந்தே பாரத் ரயிலில் இருக்கும் வசதிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
வந்தே பாரத் ரயில்களை இன்னும் பல வழித்தடங்களில் அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ள நிலையில், பயணிகள் ஆர்வம் காட்டாத காரணத்தால் ஒரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் 6-வது வந்தே பாரத் ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்ட பிலாஸ்பூர் மற்றும் நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
வந்தே பாரத் ரயிலை மேலும் பல நகரங்களுக்கு விரிவு படுத்த ரயில்வே திட்டமிட்டு இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியானது கவனிக்கத்தக்கது. 18 பெட்டிகள் கொண்டதாக இயக்கப்பட்டு வந்த இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிகள் ஆர்வம் காட்டாமல் காலியாக சென்று வருவதால் 8 பெட்டிகளாக குறைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அதேவேளையில், செகந்திராபாத் - திருப்பதி வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகள் கொண்டதாக தற்போது இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து இருப்பதால் 16 பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. இதனால் செகந்திராபாத் - திருப்பதி வழித்தடத்தில் ஓடும் ரயிலை நாக்பூர் - பிலாஸ்பூரில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதுவரை இந்த வழித்தடத்தில் 11 பெட்டிகளை கொண்ட தேஜாஸ் ரயில் இயக்கப்படும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
நாக்பூர் - பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு துவக்கி வைத்தார். வந்தே பாரத் ரயிலால் இரு நகரங்களுக்கு இடையேயான பயண தூரம் 7-8 மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் 30 நிமிடங்களாக குறைந்தது. எனினும் அதிகமான கட்டணம் உள்ளிட்டவற்றையால் பயணிகள் இதில் பயணிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications