"வந்தே பாரத்" ஸ்வீட் ஷாக்.. அடுத்த அதிரடி வருகிறது.. தமிழ்நாட்டுக்கும் குட் நியூஸ் இருக்கு..சூப்பர்ல
டெல்லி: வந்தே பாரத் ரயில் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
இந்தியாவில் ரயில்வே துறையானது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டபடியே உள்ளது.. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
எக்ஸ்பிரஸ் ரயில்களைபோல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது.

மோடியின் கனவு திட்டம்: தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் இருந்தாலும் வந்தே பாரத் அதிவேகத்தில் இயக்கப்படும் என்ற அறிவிப்புதான் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அந்தவகையில், அதிவேக வந்தே பாரத் ரயில், கடந்த 2019ல் புதுடில்லி - வாரணாசி இடையே முதன்முதலாக இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு போதிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து சென்னை, மும்பை, திருவனந்தபுரம், செகந்திராபாத் உட்பட பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
எனினும், நாட்டின் பல நகரங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டாலும், சில வழித்தடங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சமீபத்திய ஆய்வில் வந்தே பாரத் ரயில்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.. வந்தே பாரத் ரயில்களில் பெரும்பாலான சீட்கள் நிரம்பிவிடுகின்றன.. ஆனால், சில ரயில்களில் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.
கட்டணம் அதிகம்: குறிப்பாக இந்தூர் - போபால், போபால்-ஜவல்பூர், நாகபுரி-பிலாஸ்பூர் உள்ளிட்ட வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன..
கடந்த ஜுன் மாதம், போபால் - இந்தூர் வந்தே பாரத் ரயில் சேவையில் 29 சதவீதமும் மறுமார்க்கத்தில் 21 சதவீதமும் மட்டுமே இருக்கைகள் நிரம்பியுள்ளன.. 33 மணி நேர பயணம் கொண்ட இந்த ரயிலில், ஏசி வசதி கொண்ட இருக்கைக்கு ரூ.950, ஏசி வசதி கொண்ட சிறப்பு இருக்கைக்கு ரூ.1,525 கட்டணமாகும்.
போபால்-ஜபல்பூர் வந்தே பாரத் ரயிலில் 32 சதவீதம், மறுமார்க்கத்தில் 36 சதவீதம், நாகபுரி-பிலாஸ்பூர் ரயிலில் சராசரியாக 55 சதவீதம் என்ற அளவில்தான் பயணிகள் எண்ணிக்கை உள்ளது. போபால்-ஜபல்பூர் ரயிலில் கட்டணங்கள் ரூ.1550(ஏசி இருக்கை), ரூ.1880 (ஏசி சிறப்பு இருக்கை) நாகபுரி-பிலாஸ்பூர் ரயிலில் கட்டணங்கள் ரூ.1075 (ஏசி இருக்கை) ரூ.2045 (ஏசி சிறப்பு இருக்கை) என்ற அளவில் உள்ளது. இதுபோல் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள ரயில்களில் கட்டணத்தை குறைக்க ரயில்வே பரிசீலித்து வருவதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications
