கலக்குதே "வந்தே பாரத்".. இனி ஒரே ஜாலிதான்..நாகர்கோவிலை விடுங்க.. மத்திய அரசின் பெரிய அதிரடி பாருங்க
டெல்லி: விரைவில் 5 வந்தே பாரத் ரயிலை பிரதமர் துவக்கி வைக்க போவதாக செய்திகள் வெளியான நிலையில், வந்தே பாரத் சேவை குறித்து மற்றொரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி மகிழ்ச்சியை தந்து வருகிறது.
சென்னை - நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்படும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.. அதேசமயம், இந்த ரயில் சேவையை கன்னியாகுமரியை மையமாக வைத்து தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்க துவங்கி உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு எம்பி தேர்தலுக்கு பிறகு ஒரு ரயில் கூட குமரி மாவட்டத்துக்கு, திருநெல்வேலி, மதுரை வழியாக பயணம் செய்யும் விதத்தில் இதுவரை அறிவிக்கப்பட வில்லையாம்..
முக்கிய கோரிக்கை: இதை பயணிகள் சங்கத்தினர் வருத்தமாக சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, திருநெல்வேலி முதல் மேலப்பாளையம் வரையிலும், ஆரல்வாய்மொழி முதல் கன்னியாகுமரி வரை உள்ள இடங்களில் இரட்டைபாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.. இந்த பணிகள் முடிவு பெற்ற பிறகு குமரிக்கு வந்தே பாரத் ரயில்கள் வந்தால் நல்லா இருக்கும் என்கிறார்கள்..
கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த்தும் தொடர்ந்து இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்.. சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பயன் அளிப்பதுடன் தென் தமிழகத்தின் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன் பெறலாம் என்று கேட்டுக் கொண்டே வருகிறார்.

பயணிகள் ரயில்: இந்நிலையில், மற்றொரு கோரிக்கை எழுந்துள்ளது.. கொல்லம் - கன்னியாகுமரி மெமு மற்றும் திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்தால் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் நிலவும் நடைமேடை இடநெருக்கடி வெகுவாக குறையும் என்கிறார்கள்..
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக நாகர்கோவில் + கோட்டயம் ரயிலை திருநெல்வேலி வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டித்து செய்து இயக்கியால் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிலவும் நடைமேடை மற்றும் முனைய இடநெருக்கடி வெகுவாக குறையும். எனவே, திருநெல்வேலி - நாகர்கோவில் பயணிகள் ரயிலை கொச்சுவேலி வரை நீட்டிப்பு செய்து இயக்கினால் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிலவும் நடைமேடை இடநெருக்கடி வெகுவாக குறையும் என்கிறார்கள் பொதுமக்கள்.
கன்னியாகுமரி: நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து இப்போது இயங்கும் ரயில்களை, இதுபோல் மாற்றம் செய்து இயக்கினால் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் இருந்து வந்தேபாரத் உட்பட புதிய ரயில்கள் இயக்க வசதி வாய்ப்புகள் வரும் என்றும் பயணிகள் கருத்து கூறுகிறார்கள்.
இதனிடையே வந்தே பாரத் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. ஸ்லீப்பர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டிருந்தது.. ஆனால் அதை உருவாக்க ஒப்பந்தம் பெற்ற கூட்டு நிறுவனத்தில், அதன் பங்குதாரர்களிடையே தகராறு ஏற்பட்டுவிட்டது.. எனவே, ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் சேவை தொடங்கப்படுமா? இல்லையா? அல்லது காலதாமதம் ஏற்படுமா? என்றெல்லாம் சந்தேகங்கள் கிளம்பின.
புது அறிவிப்பு: ஆனால், ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களின் முதல் தொகுதி, அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் வந்துவிடும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி தெரிவித்துள்ளார்.. இந்த ரயில்களை இயக்குவதற்கான திட்டமும் தற்போது துவங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்..
அதுமட்டுமல்ல, ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் முடிய, எப்படியும் டிசம்பர் இறுதி ஆகிவிடும் என்றாலும், திட்டமிட்டபடி 22 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது" என்றார் மத்திய அமைச்சர்.. விரைவில் 6 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ள நிலையில், ஸ்லீப்பர் வந்தே பாரத் குறித்த முக்கிய அப்டேட்டை அமைச்சர் தந்துள்ளது, பயணிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications