குடியுரிமையை வைத்து பெரிதாக திட்டம் போட்ட லலித் மோடி! இப்போது வசமாக சிக்கிவிட்டார்! எப்படி பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ள லலித் மோடிக்கு சமீபத்தில் வனுவாட்டு அரசு பாஸ்போர்ட்டை வழங்கியிருந்தது. மேலும், அவர் தனது இந்தியக் குடியுரிமையைத் துறக்கவும் விண்ணப்பித்து இருந்தார். இது லலித் மோடிக்கு பெரும் தலைவலியாக மாறியிருந்த நிலையில், இப்போது வனுவாட்டு அரசு அதிரடியாக ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

இப்போது உலகில் பல்வேறு கிரிக்கெட் லீக் தொடர்கள் நடந்தாலும் அதற்கு எல்லாம் தாய் என்னவோ ஐபிஎல் தான். கடந்த 2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடர் இப்போது உலகின் பணக்கார கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்த ஐபிஎல் போட்டிகளை முதலில் தொடங்க காரணமாக இருந்தவர் லலித் மோடி. ஐபிஎல் தொடரை ஆரம்பித்தாலும் அதன் பிறகு இவர் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Lalit Modi ipl world

லலித் மோடி

இந்தியாவில் இருந்தால் கைது செய்யப்படுவோம் என அஞ்சி அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். லண்டனில் உள்ள அவரை நாடுகடத்தத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வந்தது. லண்டனில் இருந்தால் நாடுகடத்தப்படலாம் என அஞ்சிய அவர் சமீபத்தில் தான் தென் பசிபிக் கடலில் உள்ள வனுவாட்டு நாட்டில் நிரந்தரமாகக் குடியேறி, அங்கு பாஸ்போர்ட் பெற முயன்றார்.

குடியுரிமை சர்ச்சை

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அந்நாட்டு அரசு பாஸ்போர்ட்டை வழங்கியிருந்தது. இதையடுத்து அவர் தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பித்தார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக வனுவாட்டு அரசு தெரிவித்துள்ளது. லலித் மோடி நாடுகடத்தலில் இருந்து தப்பிக்க முயல்வதைச் சுட்டிக்காட்டிய வனுவாட்டு, இதனால் அவருக்குக் குடியுரிமை தருவது சரியாக இருக்காது எனத் தெரிவித்துள்ளது.

சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, லலித் மோடிக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு நாட்டின் குடியுரிமை ஆணையத்திடம் வனுவாட்டு பிரதமர் ஜோதம் நபட் கேட்டுக் கொண்டதாக வனுவாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது..


வனுவாட்டு பிரதமர் சொல்வது என்ன

வனுவாட்டு பிரதமர் ஜோதம் நபட் மேலும் கூறுகையில், "லலித் மோடி குடியுரிமை கோரி விண்ணப்பித்தபோது வழக்கமான சோதனைகளை பேக் கிரவுண்ட் செக்களை செய்தோம். அப்போது அவர் மீது எந்தவொரு குற்றவியல் தண்டனையும் இல்லை என்றே வந்தது. இருப்பினும், இந்திய அரசு அலர்ட் கொடுக்க கோரிக்கை விடுத்தும் இன்டர்போல் அதை இரண்டு முறை நிராகரித்து இருப்பது இப்போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. ஒருவேளை இன்டர்போல் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தால் அவரது குடியுரிமை விண்ணப்பம் தானாக ரத்து செய்யப்பட்டு இருக்கும்.

சரியான போக்கு இல்லை

வனுவாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பது என்பது ஒரு சலுகை தானே தவிர உரிமை இல்லை.. சட்டப்பூர்வ காரணங்களுக்காக மட்டுமே யாராக இருந்தாலும் குடியுரிமை பெற வேண்டும். நாடுகடத்தப்படுவதைத் தவிர்க்க எங்கள் குடியுரிமையைப் பெறுவது சரியான நடைமுறை இல்லை.. சமீபத்தில் வெளியான தகவல்களை வைத்துப் பார்த்தால் லலித் மோடியின் நோக்கம் அதுதான் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.

வனுவாட்டு குடியுரிமை பெறுவது எப்படி

பசிபிக் தீவு பகுதிகளில் அமைந்துள்ள குட்டி நாடு தான் வனுவாட்டு.. இங்குக் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வோருக்குக் குடியுரிமை வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ளது. இதன் மூலமாகவே அந்த தொகையை முதலீடு செய்து குடியுரிமை பெறும் முயற்சியில் லலித் மோடி இறங்கியிருந்தார். ஐபிஎல் தொடரை நடத்தும் போது பல நூறு கோடி மோசடி செய்ததாக லலித் மோடி மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. கைதில் இருந்து தப்பிக்க அவர் 2010ல் இந்தியாவில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+