துணை ஜனாதிபதி தேர்தல்.. தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்த தேர்தல் ஆணையம்.. யார் இவர்கள்? பின்னணி
டெல்லி: நம் நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த 21ம் தேதி திடீரென்று அந்த பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து புதிய துணை ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தான் துணை ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிப்பதற்கான தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. நம் நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் தான் ராஜ்யசபா தலைவராக செயல்படுவார். துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் இருந்த நிலையில் அவர் ராஜ்யசபாவை வழிநடத்தினார்.

ஆனால் திடீரென்று அன்றைய தினம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கினார். தனது உடல்நலனை காரணம் காட்டி ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்தார். ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதம் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது. அந்த வகையில் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
துணை ஜனாதிபதி தேர்தலை எடுத்து கொண்டால் ரோட்டேஷன் முறையில் லோக்சபா பொதுசெயலாளர் அல்லது ராஜ்யசபா பொதுச்செயலாளர் தேர்தல் அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். கடந்த முறை நடந்த துணை ஜனாதிபதி தேர்தலின்போது லோக்சபாவின் பொதுச்செயலாளர் தேர்தல் அலுவலராக செயல்பட்டார். இதனால் இந்த முறை ராஜ்யசபாவின் பொதுச்சயலாளர் தேர்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜ்யசபா தலைவர் மற்றும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திடம் ஆலோசனை மேற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உதவி தேர்தல் அலுவலர்களாக ராஜ்யசபாவின் செலாளாளராக இருக்கும் கரிமா ஜெயின் மற்றும் ராஜ்யசபாவின் இயக்குநராக இருக்கும் விஜயகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராஜ்யசபாவின் பொது செயலாளராக பிரமோத் சந்திர மோடி செயல்பட்டு வரும் நிலையில் அவர் தான் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அலுவலராக செயல்பட உள்ளார்.
தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள பிரமோத் சந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர். இவர் 1982ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி ஆவார். இவர் மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவராக 2019 முதல் 2021 மே மாதம் வரை செயல்பட்டார். அதன்பிறகு 2021 நவம்பர் மாதம் முதல் ராஜ்யசபாவின் பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார்.
துணை ஜனாதிபதியை நாடாளுமன்றத்தின் இருசபைகளின் எம்பிக்கள் தான் தேர்வு செய்வார்கள். நாடாளுமன்றத்தில் உள்ள லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் ஓட்டளித்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள். அதன்படி லோக்சபாவை எடுத்து கொண்டால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட 543 எம்பிக்களும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 2 எம்பிக்கள் என மொத்தம் 545 எம்பிக்கள் ஓட்டளிப்பார்கள். அதேபோல் ராஜ்யசபாவை எடுத்து கொண்டால் 233 மாநில, யூனியன் பிரதேச நியமன எம்பிக்கள், 12 ஜனாதிபதி நியமன எம்பிக்கள் என்று மொத்தம் 245 பேர் ஓட்டளிக்க தகுதியானவர்கள்.
இதற்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேபோல் ஆளும் பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் இனி துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தேர்வு தொடங்கும். அதன்பிறகு ராஜ்யசபா,லோக்சபா எம்பிக்கள் ஓட்டளிப்பார்கள். அதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெறுவோர் துணை ஜனாதிபதியாக தேர்வாவார். தற்போதைய சூழலில் பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications