டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தல் 2025 இன்று நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். இதில் 452 வாக்குகள் பெற்று சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்ர். சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் நாட்டின் 15வது குடியரசு துணை தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
ஜெகதீப் தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்கள். இன்று வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
நாட்டின் குடியரசு துணைத் தலைவராக இருந்தவர் ஜெகதீப் தன்கர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை காரணமாகக் கூட்டத்தொடர் நடக்கும்போதே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாகத் துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று இந்த தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களிப்பர். ராஜ்யசபா செயலாளர் பி.சி. மோடி, தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். பாராளுமன்ற இல்லம், வாசுதா, அறை எண். F-101-ல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். துணை ஜனாதிபதி தேர்தல் குழுவில் 781 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 239 பேர் ராஜ்யசபாவையும், 542 பேர் லோக்சபாவையும் சேர்ந்தவர்கள். இதில் 342 பாஜக உறுப்பினர்கள் உட்பட 425 எம்.பி.க்களின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. எதிர்க்கட்சி கூட்டணிக்கு 126 காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட 324 உறுப்பினர்கள் உள்ளனர்.
Sep 09, 2025, 10:09 pm IST
நாட்டின் குடியரசு துணை தலைவராக தேர்வாகி உள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sep 09, 2025, 10:04 pm IST
சிபி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் அவரது வாழ்க்கை எப்போதும் அர்ப்பணிக்கப்பட்டது. நம் அரசமைப்பை மேலும் வலுப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்தை மேம்படுத்தும் சிறந்த துணைத்தலைவராக இருப்பார் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
Congratulations to Thiru CP Radhakrishnan Ji on winning the 2025 Vice Presidential election. His life has always been devoted to serving society and empowering the poor and marginalised. I am confident that he will be an outstanding VP, who will strengthen our Constitutional…
துணை குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சிபி ராதாகிருஷ்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அரசமைப்பு கட்டமைப்பு, ஜனநாயகக் கொள்கைகள், கடமைகளை உறுதியுடன் சிபி ராதாகிருஷ்ணன் நிறைவேற்றுவார் என நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Sep 09, 2025, 9:13 pm IST
குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக தார்மீக ரீதியில் தோல்வியை தான் தழுவியுள்ளது என்றும், எண்கணித வெற்றி தான் பாஜகவுக்கு கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
Sep 09, 2025, 8:46 pm IST
இந்தியா கூட்டணிக்கு கடந்த குடியரசு துணை தலைவர் தேர்தலை விட அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். கடந்த 2022- ஆம் ஆண்டில் எதிர்க்கட்சி வேட்பாளர் 26 சதவீதம் வாக்குகளை பெற்றார். இம்முறை 40 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Sep 09, 2025, 8:07 pm IST
குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட வாக்குகளை விட கூடுதல் வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றிருப்பது மக்கள் பிரதிநிதிகள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Sep 09, 2025, 7:57 pm IST
குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வரும் 12 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sep 09, 2025, 7:57 pm IST
குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வரும் 12 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sep 09, 2025, 7:44 pm IST
டெல்லியில் இன்று நடந்த குடியரசு துணை தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணி வேட்பாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை தமிழகத்தில் உள்ள பாஜகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
Sep 09, 2025, 7:44 pm IST
டெல்லியில் இன்று நடந்த குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் பாஜகவினர் உற்சாகமாக வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
Sep 09, 2025, 7:34 pm IST
டெல்லியில் நடைபெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 152 வாக்குகள் வித்தியாசத்தில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்ஷன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.
Sep 09, 2025, 7:33 pm IST
இந்தியாவின் 15வது குடியரசு துணை தலைவராகிறார் சிபி ராதாகிருஷ்ணன்
Sep 09, 2025, 7:33 pm IST
தமிழ்நாட்டை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி
Sep 09, 2025, 7:33 pm IST
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி
Sep 09, 2025, 6:53 pm IST
டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்.
#WATCH | Delhi | Opposition's vice-presidential candidate Justice Sudershan Reddy arrives at the residence of Congress President Mallikarjun Kharge
The counting of votes for the Vice Presidential election has begun in Parliament. pic.twitter.com/EhW849OKXG
டெல்லியில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை லோக்சபா, ராஜ்யசா உறுப்பினர்கள் வாக்களித்தனர். 392-க்கும் அதிகமான வாக்குகள் பெறுபவர் வெற்றி பெறுவார்.
Sep 09, 2025, 5:50 pm IST
டெல்லியில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தம் உள்ள 782 வாக்குகளில் 770 வாக்குகள் பதிவாகியுள்ளன. 12 பேர் புறக்கணித்துள்ளனர். சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு இன்று இரவே தேர்தல் முடிவு வெளியிடப்படும்.
Sep 09, 2025, 5:25 pm IST
நாட்டின் அடுத்த துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான துணை ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மொத்தம் 770 வாக்குகள் பதிவாகியுள்ளது.
Sep 09, 2025, 5:06 pm IST
. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் கூட இல்லாத நிலையில் திமுகவிற்கு பாஜக புதிய நெருக்கடியை இதன் மூலம் கொடுத்துள்ளது. கவுண்டர் பிரிவை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதி (எதிர்காலத்தில் ஜனாதிபதி வாய்ப்பும் வரலாம்) ஆவதை திமுக தடுக்க பார்க்கிறது என்ற கருத்தை பாஜக முன்னெடுக்க வாய்ப்புகள் உள்ளன. இது கொங்கு மண்டலத்தில் சட்டசபை தேர்தல் சமயத்தில் வலுவான பிரச்சாரமாகவும் அமையலாம்.
Sep 09, 2025, 4:34 pm IST
குடியரசு துணைத் தலைவரை தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பாக சிபி ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டு உள்ளார். இன்று நடைபெற்று வரும் தேர்தலில் அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. பாஜகவின் இந்த மூவ் தமிழக அரசியலை தாண்டி கொங்கு மண்டலத்தை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
Sep 09, 2025, 4:29 pm IST
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், அது தமிழக அரசியலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும். குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்தப் பகுதியில் பாஜக வளர்ச்சிக்கும் இது உதவியாக இருக்கும் என பாஜகவினர் நம்புகின்றனர்
Sep 09, 2025, 4:02 pm IST
பிஆர்எஸ், பிஜேடி போன்ற கட்சிகள் வாக்குப்பதிவில் பங்கேற்காததால் போட்டி மேலும் ஒருதலைப்பட்சமாகி விட்டது. எனவே சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகவே பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
Sep 09, 2025, 3:19 pm IST
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMகள்) 2004ஆம் ஆண்டு முதல் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் குடியரசுத் தலைவர் அல்லது துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களுக்கு இவை பயன்படுத்தப்படுவதில்லை
Sep 09, 2025, 2:52 pm IST
துணைக் குடியரசுத் தலைவர் ஐந்து ஆண்டு காலம் பதவி வகிப்பார், மேலும் மாநிலங்களவையின் பதவிவழி தலைவராகவும் இருப்பார். இந்த பதவி மேல்சபையின் செயல்பாட்டை, குறிப்பாக அரசியல் போட்டிகள் தீவிரமடையும் காலங்களில் பராமரிப்பதில் முக்கியமானது
Sep 09, 2025, 2:14 pm IST
துணை குடியரசு தேர்தலில் தனது வாக்கை செலுத்தினார் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்
Sep 09, 2025, 1:59 pm IST
விலகி இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கருத்தில் கொள்ளும்போது, NDA வேட்பாளர் சுமார் 436 முதல் 448 வாக்குகளையும், ரெட்டி 320க்கும் மேற்பட்ட வாக்குகளையும் பெறலாம். இது தன்கரின் 2022ஆம் ஆண்டு வெற்றியை விட குறைந்த வித்தியாசமாக இருந்தாலும், தெளிவான வெற்றியாகவே அமையும்.
Sep 09, 2025, 1:36 pm IST
சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சி, மிசோரத்தின் ஜோரம் மக்கள் இயக்கம் மற்றும் பல சுயேச்சைகள் உட்பட சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் சுமார் 10 வாக்குகளைப் பெற்றுள்ளன. இவர்களின் முடிவுகள் சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம், ஆனால் தேர்தல் முடிவை மாற்றாது.
Sep 09, 2025, 12:59 pm IST
கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (BRS) கட்சி, 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், யாருக்கும் ஆதரவு தராமல் விலகி இருக்கும் என அறிவித்துள்ளது.
Sep 09, 2025, 12:45 pm IST
நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி, 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், தேர்தலில் யாருக்கும் ஆதரவு தராமல் விலகி இருக்கும் என அறிவித்துள்ளது.
Sep 09, 2025, 12:27 pm IST
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் அரசியலமைப்பின் 66வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது. மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் முறையிலிருந்து இது வேறுபட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் விருப்பங்களை வாக்குச் சீட்டில் குறிப்பிடுவார்கள்
READ MORE
10:14 AM, 9 Sep
நாட்டின் குடியரசு துணைத் தலைவராக இருந்தவர் ஜெகதீப் தன்கர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை காரணமாகக் கூட்டத்தொடர் நடக்கும்போதே தனது பதவியை ராஜினாமா செய்தார்
10:15 AM, 9 Sep
குடியரசு துணை தலைவர் பதவிக்கான தேர்தல் தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் வாக்களிக்கிறார்கள். வாக்குப்பதிவு முடிந்து, மாலை முடிவுகள் வெளியாகும்
10:15 AM, 9 Sep
இன்று இந்த தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களிப்பர்.
10:33 AM, 9 Sep
ராஜ்யசபா செயலாளர் பி.சி. மோடி, தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். பாராளுமன்ற இல்லம், வாசுதா, அறை எண். F-101-ல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
10:53 AM, 9 Sep
துணை ஜனாதிபதி தேர்தல் குழுவில் 781 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 239 பேர் ராஜ்யசபாவையும், 542 பேர் லோக்சபாவையும் சேர்ந்தவர்கள்
10:53 AM, 9 Sep
342 பாஜக உறுப்பினர்கள் உட்பட 425 எம்.பி.க்களின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. எதிர்க்கட்சி கூட்டணிக்கு 126 காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட 324 உறுப்பினர்கள் உள்ளனர்.
11:05 AM, 9 Sep
குடியரசு துணை தலைவர் தேர்தல் : பிரதமர் மோடி வாக்களித்தார்
எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி சார்பில், தெலுங்கானாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இவர் 2011ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். கருப்புப் பணம் தொடர்பான அரசின் செயலற்ற தன்மையை விமர்சித்த தீர்ப்புகளாலும், நக்சல் எதிர்ப்பு சல்வா ஜுடும் இயக்கத்தை அரசியலமைப்பிற்கு எதிரானது என அறிவித்த தீர்ப்பாலும் இவர் கவனம் பெற்றார்
11:39 AM, 9 Sep
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இரு வேட்பாளர்களும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவே முதல் முறை. ராதாகிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர், ரெட்டி தெலுங்கானாவைச் சேர்ந்தவர்.
12:03 PM, 9 Sep
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் குழுவில் 781 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மக்களவையில் 542 (ஒரு காலியிடம் தவிர), மாநிலங்களவையில் 239 (ஆறு காலியிடங்கள் தவிர) உறுப்பினர்கள் உள்ளனர்.
12:27 PM, 9 Sep
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் அரசியலமைப்பின் 66வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகிறது. மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் முறையிலிருந்து இது வேறுபட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் விருப்பங்களை வாக்குச் சீட்டில் குறிப்பிடுவார்கள்
12:45 PM, 9 Sep
நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சி, 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், தேர்தலில் யாருக்கும் ஆதரவு தராமல் விலகி இருக்கும் என அறிவித்துள்ளது.
12:59 PM, 9 Sep
கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (BRS) கட்சி, 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், யாருக்கும் ஆதரவு தராமல் விலகி இருக்கும் என அறிவித்துள்ளது.
1:36 PM, 9 Sep
சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சி, மிசோரத்தின் ஜோரம் மக்கள் இயக்கம் மற்றும் பல சுயேச்சைகள் உட்பட சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் சுமார் 10 வாக்குகளைப் பெற்றுள்ளன. இவர்களின் முடிவுகள் சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம், ஆனால் தேர்தல் முடிவை மாற்றாது.
1:59 PM, 9 Sep
விலகி இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கருத்தில் கொள்ளும்போது, NDA வேட்பாளர் சுமார் 436 முதல் 448 வாக்குகளையும், ரெட்டி 320க்கும் மேற்பட்ட வாக்குகளையும் பெறலாம். இது தன்கரின் 2022ஆம் ஆண்டு வெற்றியை விட குறைந்த வித்தியாசமாக இருந்தாலும், தெளிவான வெற்றியாகவே அமையும்.
2:14 PM, 9 Sep
துணை குடியரசு தேர்தலில் தனது வாக்கை செலுத்தினார் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்
2:52 PM, 9 Sep
துணைக் குடியரசுத் தலைவர் ஐந்து ஆண்டு காலம் பதவி வகிப்பார், மேலும் மாநிலங்களவையின் பதவிவழி தலைவராகவும் இருப்பார். இந்த பதவி மேல்சபையின் செயல்பாட்டை, குறிப்பாக அரசியல் போட்டிகள் தீவிரமடையும் காலங்களில் பராமரிப்பதில் முக்கியமானது
3:19 PM, 9 Sep
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMகள்) 2004ஆம் ஆண்டு முதல் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் குடியரசுத் தலைவர் அல்லது துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களுக்கு இவை பயன்படுத்தப்படுவதில்லை
4:02 PM, 9 Sep
பிஆர்எஸ், பிஜேடி போன்ற கட்சிகள் வாக்குப்பதிவில் பங்கேற்காததால் போட்டி மேலும் ஒருதலைப்பட்சமாகி விட்டது. எனவே சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகவே பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
4:29 PM, 9 Sep
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், அது தமிழக அரசியலில் பாஜகவுக்கு சாதகமாக அமையும். குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்தப் பகுதியில் பாஜக வளர்ச்சிக்கும் இது உதவியாக இருக்கும் என பாஜகவினர் நம்புகின்றனர்
4:34 PM, 9 Sep
குடியரசு துணைத் தலைவரை தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பாக சிபி ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டு உள்ளார். இன்று நடைபெற்று வரும் தேர்தலில் அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. பாஜகவின் இந்த மூவ் தமிழக அரசியலை தாண்டி கொங்கு மண்டலத்தை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
5:06 PM, 9 Sep
. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் கூட இல்லாத நிலையில் திமுகவிற்கு பாஜக புதிய நெருக்கடியை இதன் மூலம் கொடுத்துள்ளது. கவுண்டர் பிரிவை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதி (எதிர்காலத்தில் ஜனாதிபதி வாய்ப்பும் வரலாம்) ஆவதை திமுக தடுக்க பார்க்கிறது என்ற கருத்தை பாஜக முன்னெடுக்க வாய்ப்புகள் உள்ளன. இது கொங்கு மண்டலத்தில் சட்டசபை தேர்தல் சமயத்தில் வலுவான பிரச்சாரமாகவும் அமையலாம்.
5:25 PM, 9 Sep
நாட்டின் அடுத்த துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான துணை ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மொத்தம் 770 வாக்குகள் பதிவாகியுள்ளது.
5:50 PM, 9 Sep
டெல்லியில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தம் உள்ள 782 வாக்குகளில் 770 வாக்குகள் பதிவாகியுள்ளன. 12 பேர் புறக்கணித்துள்ளனர். சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு இன்று இரவே தேர்தல் முடிவு வெளியிடப்படும்.
6:46 PM, 9 Sep
டெல்லியில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை லோக்சபா, ராஜ்யசா உறுப்பினர்கள் வாக்களித்தனர். 392-க்கும் அதிகமான வாக்குகள் பெறுபவர் வெற்றி பெறுவார்.
6:53 PM, 9 Sep
டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்.
#WATCH | Delhi | Opposition's vice-presidential candidate Justice Sudershan Reddy arrives at the residence of Congress President Mallikarjun Kharge
The counting of votes for the Vice Presidential election has begun in Parliament. pic.twitter.com/EhW849OKXG
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி
7:33 PM, 9 Sep
தமிழ்நாட்டை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி
7:33 PM, 9 Sep
இந்தியாவின் 15வது குடியரசு துணை தலைவராகிறார் சிபி ராதாகிருஷ்ணன்
7:34 PM, 9 Sep