Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மாத ஊதியம் எவ்வளவு? என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மாத சம்பளம் மற்றும் இதர சலுகைகள் என்ன என்பதை பார்க்கலாம். நாட்டின் 15 ஆவது குடியரசுத் துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டியும் போட்டியிட்டனர்.

Vice Presidential Election 2025 2025

இந்த தேர்தலில் மொத்தம் 767 எம்பிக்கள் வாக்களித்தனர். அவற்றில் 752 வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மீதம் 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன், சுதர்சன ரெட்டியை காட்டிலும் 152 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

மூன்றாவது தமிழர்

குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்படும் மூன்றாவது தமிழர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவார். முதன் முதலில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் அந்த பதவிகளை அலங்கரித்தனர். தற்போது மூன்றாவது தமிழராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

என்ன ஊதியம்

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு என்ன ஊதியம் என்பதை பார்க்கலாம். துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யும் நபர், ராஜ்யசபாவின் தலைவராகவும் பணியாற்றுவார். எனவே இவருக்கு தனியாக குடியரசுத் துணைத் தலைவர் என்பதற்கென்ன ஊதியம் கிடையாது.

ரூ 4 லட்சம் + சலுகைகள்

ஆனால் மாநிலங்களவை தலைவர் பதவிக்காக மாதந்தோறும் ரூ 4 லட்சம் ஊதியம் வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் அவருக்கு என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதையும் பார்க்கலாம்.

  • டெல்லியில் குடியரசுத் துணைத் தலைவருக்கு இல்லம்
  • இசட் அல்லது இசட் பிளஸ் பாதுகாப்பு
  • அரசு வாகனம், ஓட்டுநர், எரிபொருள் இலவசமாக கொடுக்கப்படும்
  • தொலைபேசி, இணையதள வசதி
  • இந்தியா, வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விமானம், ரயில், கப்பல் போக்குவரத்தை இலவசமாக பயணிக்கலாம்.
  • இலவச மருத்துவம், தனி மருத்துவர் ஒதுக்கீடு செய்யப்படும்
  • குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஓய்வூதியம், இதர சலுகைகள் கிடைக்கும்.


ராஜினாமா

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர் திடீரென கடந்த ஜூலை 21 ஆம் தேதி ராஜினாமா செய்ததை அடுத்து இந்த பதவிக்கான தேர்தல் இன்று நடத்தப்பட்டது.

தேர்வு எப்படி

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் வாக்களிப்பர். இதில் நியமன எம்பிக்களும் வாக்களிலாம். ஆனால் நியமன எம்பிக்களால் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது.

யாருக்கு எத்தனை செல்வாக்கு

மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543. மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245. இரு அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 788. இதில் மக்களவையில் ஒரு இடமும், மாநிலங்களவையில் 5 இடங்களும் காலியாக உள்ளன. இதனால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 782 ஆக உள்ளது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற 392 வாக்குகள் தேவைப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நியமன எம்பிக்கள் உள்பட மக்களவையில் 293 பேரும் மாநிலங்களவையில் 129 பேரும் என மொத்தம் 422 எம்பிக்கள் உள்ளனர்.

இந்தியா கூட்டணிக்கு நியமன எம்.பி.க்கள் உட்பட மக்களவையில் 249 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 105 உறுப்பினர்கள் என மொத்தம் 354 எம்.பி.க்கள் உள்ளனர். மொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 422 உறுப்பினர்களும், இந்தியா கூட்டணிக்கு 354 உறுப்பினர்களும் உள்ளனர்.

பதவிக்காலம்

குடியரசுத் துணைத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். அவரது பதவிக்காலம் முடிந்தும் அடுத்தவரை தேர்ந்தெடுக்கும் வரை அவர் அந்தப் பதவியில் இருக்கலாம். மாநிலங்களவை ஒத்தி வைக்க துணைக் குடியரசுத் துணைத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.

குடியரசுத் தலைவரால் செயல்பட முடியாமல் போகும் போது குடியரசுத் துணைத் தலைவர் செயல்படலாம். மாநிலங்களவை தலைவராகவும் இருக்கும் இவருக்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி அது வென்றால் அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படுவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+