குடியரசுத் துணை தலைவர் தேர்தல்! வேட்புமனு தாக்கல் செய்தார் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
டெல்லி: குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்த நிலையில், இந்த பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெகதீப் தன்கரின் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை இருந்த நிலையில், அவர் திடீரென தனது பதவியை கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி ராஜினாமா செய்துவிட்டார். உடல் நல காரணங்களால் ராஜினாமா செய்திருப்பதாக அவர் அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 25 வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் நடைமுறையை பொறுத்தவரையில், ஒரு வேட்பாளரை குறைந்தபட்சம் 20 எம்பிக்கள் முன்மொழிய வேண்டும். மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்.
பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியை பொருத்தவரை தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். திருப்பூரை சேர்ந்த இவர், தனது 16வது வயதிலிருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்திருக்கிறார். கடந்த 1998 மற்றும் 99 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் மக்களவை உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மட்டுமல்லாது கடந்த 2004 முதல் 2007 வரை தமிழக பாஜக தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மகாராஷ்டிரா ஆளுநராக பதவி வகித்து வருகிறார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதால் தமிழக எம்பிக்கள் அனைவரும் கட்சி பேதம் இன்றி ஆதரவாளிக்க வேண்டும் என்று அதிமுக மற்றும் பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில்தான் இந்தியா கூட்டணி தனது வேட்பாளரை அறிவித்தது. தெலுங்கானாவை சார்ந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான சுதர்சன் ரெட்டியை தனது வேட்பாளராக இந்தியா கூட்டணி முன்னிறுத்தி இருக்கிறது.
நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் ஒரு மனதாக சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தமிழக அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக திமுக ஆதரவு கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது. ராதாகிருஷ்ணன் தமிழர் என்பதால் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று பாஜக மற்றும் அதன் கூட்டணிகள் வலியுறுத்தி இருந்தன.
இப்படி இருக்கையில் தெலுங்கானாவை சேர்ந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கடி ஏற்படுத்தி இருக்கிறது. சுதர்சன் ரெட்டி, ஆந்திர பிரதேசத்தின் ஆளும் கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரி இருக்கிறார். இந்த ஆதரவு நிராகரிக்கப்படும் பொழுது ஆந்திர மக்களிடையே அது விவாத பொருளாக மாறும். இப்படியாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது இந்தியா கூட்டணி.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications