தொக்காக சிக்கிய தேர்தல் அதிகாரி.. உச்ச நீதிமன்றத்தில் திரையிடப்பட்ட.. சண்டிகர் மேயர் தேர்தல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையில், தலைமை நீதிபதி முன்பு தேர்தல் குளறுபடி தொடர்பான வீடியோ காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலத்திற்கும், ஹரியானா மாநிலத்திற்கும் சண்டிகர் தலைநகரமாக செயல்பட்டு வருகிறது. சண்டிகர் நகராட்சியில் மொத்தம் 35 இடங்கள் இருக்கின்றன. இதில் பாஜக சார்பில் 14 கவுன்சிலர்களும், அகாலிதளம் சார்பில் 1 கவுன்சிலர் என மொத்தம் 15 கவுன்சிலர்கள் பாஜக பக்கம் இருக்கின்றனர். மற்றொருபுறம் 13 கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி சார்பிலும், 7 கவுன்சிலர்கள் காங்கிரஸ் சார்பிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

 Videos related to the Chandigarh mayoral election rigging were screened in the Supreme Court

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி எனும் பெயரில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் இணைந்து போட்டியிட உள்ள நிலையில், இதற்கு முன்னோட்டமாக சண்டிகர் மேயர் தேர்தலில் இணைந்து போட்டியிட காங்கிரஸும், ஆம் ஆத்மியும் முன் வந்தன. இயல்பாகவே இந்த கூட்டணிக்குதான் அதிக வாக்குகள் இருக்கிறது என்பதால் இவர்கள் தரப்பிலிருந்தே மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கருதப்பட்டது.

மேயர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் நிறுத்தப்பட்டார். கடந்த 30ம் தேதி திட்டமிட்டபடி தேர்தல் தொடங்கியது. இந்த தேர்தலில் எம்பியும் வாக்களிக்க முடியும் என்பதால், பாஜக எம்பியான கிர்ரோன் கெர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தார். 30ம் தேதி வாக்குப்பதிவு திட்டமிட்டபடி நடைபெற்றது. அன்றே வாக்குகளும் எண்ணப்பட்டன.

பாஜக சார்பில் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மனோஜ் சோங்கர் 16 வாக்குகளை பெற்றிருந்தார். அதேபோல காங்கிரஸ்+ஆம் ஆத்மி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட குல்தீப் குமார் 20 வாக்குகள் கிடைத்தன. ஆனால் அதில், 8 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. எனவே பாஜகவின் மனோஸ் சோங்கர் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

தேர்தல் அதிகாரி பாஜகவுக்கு சாதகமான நடந்துக்கொண்டதாக கூறி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், தேர்தல் அதிகாரி வாக்கு சீட்டில் எதையோ எழுதுவது தெரிந்தது. இதனையடுத்து பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கு அவசர வழக்காக கடந்த 31ம் தேதி விசாரிக்கப்பட்டது, விசாரணையின் இறுதியில், மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து சண்டிகர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் உச்சநீதிமன்ற படியை காங்கிரஸும், ஆம் ஆத்மியும் ஏறின.

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். மதியம் 2 மணியளவில் விசாரணை தொடங்கிய நிலையில், வாக்கு பெட்டியை பார்க்க வேண்டும் என்று நீதிபதி கேட்டார். அவரிடம் பெட்டி கொடுக்கப்பட்ட நிலையில், அதிலிருந்த வாக்கு சீட்டுகளை சரிபார்த்தார்.

பின்னர் அந்த சீட்டுக்களை தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ் முன்பு காண்பித்து, "நேற்றைய வழக்கு விசாரணையின்போது, வாக்கு சீட்டுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதால்தான் அதில் பேனாவால் எழுதினேன் என்று கூறியிருந்தீர்கள். இப்போது என் கையில் இருக்கும் வாக்கு சீட்டுக்களை பார்த்து சொல்லுங்கள் அவை எங்கே சேதப்படுத்தப்பட்டுள்ளது?" என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது ஆம் ஆத்மி தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், "எந்த வாக்குச்சீட்டுகளும் செல்லாதவை அல்ல. அனில் மசிஹ் நீதிமன்றத்திலேயே பொய் கூறியுள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். இதனையடுத்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார். மேலும், செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும் செல்லும் என்றும் அவற்றை மறு வாக்கு எண்ணிக்கையின்போது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் தேர்தல் குளறுபடி தொடர்பான வீடியோ காட்சிகள் திரையிடப்பட்டன. அப்போது, "அனைவரும் இந்த வீடியோவை பாருங்கள். சிறிய பொழுதுபோக்கு அனைவருக்கும் நல்லது" என்று தலைமை நீதிபதி கூறினார். நீதிமன்றத்தில் லேசான சிரிப்பலை எழுந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+