வரப்பிரசாதம்.. வித்வா யோஜனா பென்ஷன்.. மாதம் ரூ.2000 வரை நிதியுதவி.. விதவை பெண்களுக்கான பெஸ்ட் திட்டம்
டெல்லி: வித்வா யோஜனா பென்ஷன் என்றால் என்ன தெரியுமா? விதவை பெண்களுக்கு பணம் வரவில்லையா? உடனே இதை செய்யுங்கள்..!!
இந்தியாவில் விதவைப் பெண்களுக்கு வித்வா யோஜனா பென்ஷன் திட்டத்தின் கீழ் அரசு தரப்பில் இருந்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் இந்திய அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்படுகிறது.. நிதி பரிவர்த்தனைகளில் இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது... அரசாங்கம் நேரடியாக ஒரு பெறுநரின் வங்கிக் கணக்கிற்குத் தொகையை மாற்றுகிறது.

குழந்தைகள்: 18 வயது முதல் 65 வயது வரை உள்ள விதவைகளுக்கு இந்த ஓய்வூதியமானது கிடைக்கிறது. விதவைப் பெண்களுக்கு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளுக்கு அவர்களுக்கு 25 வயதாகும் வரை ஓய்வூதியம் கிடைக்கும். ஒருவேளை அந்த பெண்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் 65 வயது வரை மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் 1,500 ரூபாய் வழங்கப்படும் நிலையில், 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 4500 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விதவைப் பெண்கள் சமூக நலத்துறைக்கு சென்று விதவை ஓய்வூதிய திட்டத்திற்கான படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி கொடுக்க வேண்டும். உங்களுடைய ஆவணங்களை சரிபார்த்த பிறகு மாதாந்திர ஓய்வூதியம் உங்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
தன்னம்பிக்கை: நாட்டில் விதவை பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை மனதில் வைத்துதான், மத்திய அரசாங்கம் வித்வா பென்ஷன் யோஜனாவை அறிமுகப்படுத்தியுள்ளது..
இந்த யோஜனா மூலம், விதவை பெண்களுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்குகிறது. விதவை பெண்கள் இந்த யோஜனாவின் கீழ் நிதியுதவி பெறுவதால், தங்கள் வாழ்வாதாரத்தை சம்பாதித்து கொள்ளலாம்.. தன்னம்பிக்கையுள்ளவர்களாக மாற்றும்.. பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறலாம்.. மரியாதைக்குரிய வாழ்க்கையையும் நடத்த முடியும் என்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.
தகுதி வரம்புகள் என்னென்ன? வறுமைக் கோட்டின் கீழ் வாழும் விதவைகள் அல்லது பிபிஎல் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பதாரர்கள் 40 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.. ஒரு விண்ணப்பதாரர் தனது தாயை பராமரிக்கும் திறன் கொண்ட வயது வந்த குழந்தைகளை வைத்திருந்தால், அவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
அதேபோல, ஒரு விதவை மறுமணம் செய்து கொண்டால், அவர் இந்த திட்டத்திற்கு தகுதி வாய்ந்தவர் கிடையாது.. குடும்ப வருமானம் வருடத்துக்கு ரூ.1,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.. வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு தகுதி அளவுகோல்கள் உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.. வித்வா பென்ஷன் யோஜனாவிற்கு விண்ணப்பிக்கும் முன்பு, ஒவ்வொரு மாநில அரசின் திட்டங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஒருமுறை சரிபார்ப்பது நல்லது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: வித்வா பென்ஷன் யோஜனாவின் விண்ணப்ப நடைமுறையானது, ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகிறது என்றாலும், பொதுவாக வித்வா பென்ஷன் யோஜனாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:
- மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்க தேவையானதை தேர்ந்தெடுக்கவும்.
- மாவட்டத்தின் பெயர், குடியிருப்பு முகவரி போன்ற தேவையான விவரங்களுடன் இந்தப் படிவத்தை நிரப்பவும்.
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட இந்தப் படிவத்தை முனிசிபல் கார்ப்பரேஷன் கமிஷனர் அல்லது ஜன்பத் பஞ்சாயத்து அதிகாரியிடம் சமர்ப்பிக்கவும்.
ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி: இணைய வசதி இல்லாத நபர்கள், மாநகராட்சி ஆணையர் அல்லது ஜன்பத் பஞ்சாயத்து அலுவலரைத் தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவத்தை பெற்று இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆஃப்லைன் விண்ணப்பத்திலும், அந்தந்த அதிகாரிகளிடம் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான இதேபோன்ற செயல்முறை அப்படியே உள்ளது.
என்னென்ன ஆவணங்கள் தேவை:
- விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
-பிறப்பு சான்றிதழ்
-விண்ணப்பதாரரின் வங்கி பாஸ்புக்
-கணவரின் இறப்பு சான்றிதழ்
-வருமானச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாளச் சான்றுகள்.
-ஆதார் அட்டைகள் போன்ற முகவரி ஆதாரம்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications