காங்கிரஸில் இருந்து விலகியது ஏன்? .. பாஜகவில் இணைய என்ன காரணம்.. அந்த இரு விஷயங்களை கூறிய விஜயதாரணி
டெல்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது ஏன் என்பது குறித்தும் பாஜகவில் இணைய காரணம் என்ன என்பது குறித்தும் விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் தலைமையில் விஜயதாரணி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார். அவர் டெல்லி பாஜக அலுவலகத்தில் நடந்த பிரஸ்மீட்டில் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் சில சிக்கல்களால் நான் விலகியுள்ளேன். பாஜகவில் பெண்களை ஊக்கப்படுத்துகிறார்கள். அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் தரப்பட வேண்டும். அது பாஜகவில் இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தேன். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பாக பாடுபட்டு வருகிறார். இனி அந்த செயல்முறையில் என்னுடைய பங்கும் இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயதாரணி தெரிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் கடிதத்தை செய்தியாளர்களிடம் விஜயதாரணி காட்டினார்.

நடந்தது என்ன: கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது அந்த தொகுதியில் விஜயதாரணி போட்டியிட்டு காங்கிரஸில் வாய்ப்பு கேட்டதாக தெரிகிறது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் காலமானார்.
இதனால் அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது அந்த தொகுதியில் விஜயதாரணி போட்டியிட காங்கிரஸில் வாய்ப்பு கேட்டதாக தெரிகிறது. ஆனால் கட்சித் தலைமை விஜயதாரணிக்கு வாய்ப்பு கொடுக்காமல் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு வாய்ப்பு கொடுத்து அவரும் வெற்றி பெற்றார். அது முதலே விஜயதாரணிக்கு காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இந்த முறையும் எம்.பி சீட் விஜயதாரணிக்கு கிடைக்காது என சொல்லப்பட்டு வருவதால் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி முன்னிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைவார் என சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த தகவல்களை விஜயதாரணி மறுத்தார்.
மறுத்த விஜயதாரணி: அவர் கூறியிருந்ததாவது: பாஜகவில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தற்போது பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டும் ஒரு முறை சட்டசபை தேர்தலின் போது விஜயதாரணி அதிமுகவுக்கு செல்கிறார் என செய்தி பரவியது.
அந்த நேரம் பார்த்து முதல்வராக இருந்த ஜெயலலிதாவை விஜயதாரணி சந்தித்து பேசியதால் அந்த தகவல் உண்மை என கூறப்பட்டது. ஆனால் அது போல் நடக்கவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டும் காங்கிரஸ் எம்எல்ஏ பாஜகவில் இணைகிறார் என சொல்லப்பட்டது. ஆனால் இதையும் விஜயதாரணி மறுத்திருந்தார்.
காங்கிரஸுக்கு அதிர்ச்சி: விஜயதாரணி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடருக்குக் கூட வராமல் டெல்லியில் முகாமிட்டிருந்தார். இதற்கு காரணம் அவர் பாஜகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என சொல்லப்பட்டது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்ட போது, விஜயதாரணி காங்கிரஸ் கட்சியை விட்டு போக மாட்டார். அதற்கு வாய்ப்பில்லை. அவருக்கு காங்கிரஸ் எத்தனையோ செய்துள்ளது. இனியும் செய்யும். ஒரு வழக்கிற்காக டெல்லியில் விஜயதாரணி முகாமிட்டுள்ளார். அவ்வளவுதான் என்றார். இந்த நிலையில் இன்றைய தினம் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் முன்னிலையில் விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications